உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,28,474 ஆக உயர்வு + "||" + Coronavirus kills 93 more people, infects 3,191 in past 24 hours

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,28,474 ஆக உயர்வு

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,28,474 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,28,474 ஆக உயர்ந்துள்ளது.
இஸ்லாமாபாத், 

உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொடூர கொரோனா பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் மேலும் 3,191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,28,474 ஆக உயர்ந்துள்ளது. 

பாகிஸ்தானில் கொரோனாவால் ஒரே நாளில் 93 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 4,712 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 1,29,830 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 

அங்கு அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 92,306 பேருக்கும், பஞ்சாப் மாகாணத்தில் 81,317 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 25,527 பேருக்கும், அதேசமயம் ஒட்டுமொத்தமாக 13,98,352 பேருக்கும் கொரேனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் பாகிஸ்தான் 12-வது இடத்தில் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானின் பிரபல டிவி ஹேக் செய்யப்பட்டு இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்
பாகிஸ்தானின் பிரபல செய்தித் தொலைக்காட்சி திடீரென சில நிமிடங்களுக்கு ஹேக் செய்யப்பட்டு, இந்திய தேசியக்கொடி திரையில் தோன்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியது
ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 8 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
3. தெய்வ நிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவர் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
4. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்தியா தக்க பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.
5. பாகிஸ்தான் - கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,74,289 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,74,289- ஆக உயர்ந்துள்ளது.