தேசிய செய்திகள்

இந்திய-சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு + "||" + Agreement to establish peace on the Indo-China border - Decision to withdraw forces

இந்திய-சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு

இந்திய-சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு
இந்திய-சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 6 மணி நேரம் இந்த பேச்சுவார்தை நடைபெற்றது.

அப்போது, இருநாட்டு தலைவர்களின் வழிகாட்டுதல்களையும் ஒப்புதல்களையும் பெற்று அமைதியை நிலைநாட்ட ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. நாடுகளுக்கிடையே இருக்கும் கருத்து வேறுபாடு வேற்றுமையாக மாறிவிடக்கூடாது என்று இருதரப்பிலும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இரு தரப்பும்  படைகளை விலக்கிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள்  நடைபெறாமல் இருக்கவும் இரு தரப்பிலும் உறுதி கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த பேச்சுவார்த்தை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருதரப்பிலும் ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காசநோய்த் தடுப்பூசி கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம்...! ஆய்வில் தகவல்
காசநோயைத் தடுப்பதற்காக போடப்படும் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) ஆய்வில் கொரோனா தொற்றை கட்டிப்படுத்தலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
2. இந்தியாவின் மற்றொரு பகுதியையும் சொந்தம் கொண்டாடும் நேபாளம் -மேயரின் பேச்சால் சர்ச்சை
இந்தியாவின் மற்றொரு பகுதியையும் சொந்தம் கொண்டாடும் நேபாளம் மேயரின் பேச்சால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
3. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.82 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.82 கோடியாக உயர்ந்துள்ளது.
5. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17.50 லட்சமாக உயர்வு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54, 736- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.