மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல் + "||" + Coronavirus confirmed to 3,827 people in Tamil Nadu - Health Department

தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகம் முழுவதும் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 44 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.


சென்னையில் இன்று ஒரே நாளில் 1,747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,017 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 2,573 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்று அதிகபட்ச எண்ணிக்கையாக 3,793 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யபப்ட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 66,571 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 61 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் 30 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழகத்தில் இதுவரை 1,571 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 213 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 182 பேருக்கும், திருவள்ளூரில் 175 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர அதிகபட்சமாக மதுரையில் 245 பேருக்கும், தேனியில் 119 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 109 பேருக்கும், நெல்லையில் 84 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 46,833 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 33,518 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதுவரை 13,16,937 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 41 சதவீதம் குறைவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இதுவரை 41 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.
2. தமிழகத்தில் இன்று 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் இன்று 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் இன்று தளர்வில்லா ஊரடங்கு; வாகன சோதனைகள் தீவிரம்
தமிழகம் முழுவதும் இன்று தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
5. தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு; பத்திரிகை வினியோகத்துக்கு தடை இல்லை
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் நாளை 4-வது முழு ஊரடங்கு வருகிறது.