தேசிய செய்திகள்

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Over 1,379 people have confirmed coronavirus in the last 24 hours in Delhi

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இதனால் தற்போது அங்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்திருப்பதாக டெல்லி அரசாங்கம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,823 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 3,115 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 72,088 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் தற்போது 25,620 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிலிப்பைன்ஸில் மேலும் 6,352 பேர் கொரோனாவால் பாதிப்பு
பிலிப்பைன்ஸில் இன்று மேலும் 6,352 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2. டெல்லியில் மேலும் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 674 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,61,423 ஆக உயர்வு
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,61,423 ஆக உயர்ந்துள்ளது.
4. புதுச்சேரியில் வேகமாக உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு - ஒரேநாளில் புதிதாக 178 பேருக்கு தொற்று
புதுச்சேரியில் புதிதாக 178 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது.
5. புதிதாக 215 பேருக்கு தொற்று: தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது
தூத்துக்குடியில் புதிதாக 215 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது. நெல்லை, தென்காசியில் 2 பேர் பலியானார்கள்.