தேசிய செய்திகள்

திறமையானவர்களை காங்கிரஸ் கட்சி வளர விடுவதில்லை - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு + "||" + Congress does not let the talented people grow - JP Natta

திறமையானவர்களை காங்கிரஸ் கட்சி வளர விடுவதில்லை - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

திறமையானவர்களை காங்கிரஸ் கட்சி வளர விடுவதில்லை - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
திறமையானவர்களை காங்கிரஸ் கட்சி வளர விடுவதில்லை என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததையடுத்து மத்திய அரசை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், லடாக்கில் உள்ள மக்கள் சீன ஊடுருவலுக்கு எதிராக எச்சரிக்கை குரல் எழுப்புகிறார்கள் என்றால் இதனை மத்திய அரசு புறக்கணித்தால் இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று குறிப்பிட்டிருந்தார்.


இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்பு நிலைக்குழுவின் ஒரு கூட்டத்தில் கூட கலந்து கொள்ளாத ராகுல்காந்தி, துரதிருஷ்டவசமாக தேசத்தை தொடர்ந்து இழிவுபடுத்துவதாக கூறியுள்ளார்.

நாட்டின் ஆயுதப்படைகளின் வீரம் குறித்து கேள்வி எழுப்புவதாகவும், பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் செய்யக்கூடாத அனைத்தையும் அவர் செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், ராகுல்காந்தி மிகவும் வசதியான மற்றும் புகழ்பெற்ற பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாதுகாப்பு விவகாரம் அவருக்கு ஒரு பொருட்டல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த நல்ல புரிதல் கொண்ட தகுதிமிக்க தலைவர்கள் காங்கிரசில் நிறைய பேர் இருந்தாலும், அந்தக் குடும்பம் அவர்களை வளரவிடுவதில்லை என்றும் இது உண்மையிலேயே வருத்தமளிப்பதாகவும் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு - காங். தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தல்
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு வழங்க வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.