மாநில செய்திகள்

ஒரே நாளில் கொரோனாவை குணமாக்கும் மூலிகை மைசூர்பா; ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட வேண்டும்...? + "||" + Heal the corona overnight The herb Mysoreba Eat four slices a day ...?

ஒரே நாளில் கொரோனாவை குணமாக்கும் மூலிகை மைசூர்பா; ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட வேண்டும்...?

ஒரே நாளில் கொரோனாவை குணமாக்கும் மூலிகை மைசூர்பா; ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட வேண்டும்...?
கோவையில் மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைவதாக ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் வழங்கிய நோட்டீஸ் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது

கோவையில் மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைவதாக ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் வழங்கிய நோட்டீஸ் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது


கோவை

கோவை மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் இயங்கி வரக்கூடிய நெல்லை லாலா ஸ்வீட் கடையின் உரிமையாளர் ஸ்ரீ ராம். இவர் மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமாகும் அதிசாயம் என நோட்டீஸ் விநியோகித்து வருகிறார்.

மூலிகை மைசூர்பா என்பதை 19 மூலிகைகள் பயன்படுத்தி தயாரித்து வருவதாகவும், இந்த மைசூர்பா சாப்பிட்டு வருபர்களுக்கு கொரோனா நோய் ஒரே நாளில் குணமாகும் எனவும் கடந்த 3 மாதமாக விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் சின்னியம்பாளையம், ஆர் ஜி புதூர், வெள்ளலூர் ஆகிய பகுதிகளில் கொரோனா அறிகுறி இருந்தவர்களுக்கு இலவசமாக மூலிகை மைசூர்பா அளித்ததாகவும், அதன் மூலம் அவர்கள் ஓரிரு நாட்களில் நோய் தொற்றிலிருந்து குணமாகி வந்ததாகவும் கூறுகிறார்.

தன்னுடைய தாத்தா சித்த மருத்துவத்தின் கற்றுக் கொடுத்த சில வழிமுறைகளை பின்பற்றி இந்த மூலிகை மைசூர்பா தயார் செய்ததாகவும் இதில் 19 வகையான மூலிகை பொருட்களை கொண்டு இந்த மைசூர்பா தயார் செய்துள்ளதாகவும் இது உடனடியாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் இருக்கக்கூடிய கொரோனா வைரஸை அழிக்கும் என்று இவர் குறிப்பிடுகிறார்.

மேலும் ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் விரைவில் இந்த நோயிலிருந்து விடுபடலாம் என்றும் அப்படி நோய் வாய்ப்பட்டவர்கள் சாப்பிட்டு வந்து நோயிலிருந்து விடுபட்டதாகவும், எந்த பக்க விளைவும் இல்லை எனவும் கூறுகிறார்.

மேலும் அரசு விரும்பினால் இந்த மூலிகை மைசூர்பா இலவசமாக தயாரித்து வீடு வீடாக கொண்டு சேர்க்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இதை நாட்டின் பிரதமர் முன்னிலையில் ஒப்படைக்க வேண்டும் எனவும் இதன்மூலம் உலக அரங்கில் இந்தியா பெருமைப்பட வேண்டும் என்பதே அவருடைய குறிக்கோள் என்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. உறுப்பு தானம் கிடைக்காததால் இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் உயிரிழப்பு
அறுவை சிகிச்சைக்கு தேவையான உடல் உறுப்புகள் கிடைக்காததால் இந்தியாவில் ஆண்டு தோறும் 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
2. கான்பூர் டெஸ்ட்: மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 2-ம் இன்னிங்ஸ்சில் 14 ரன்கள் சேர்ப்பு
மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 2-ம் இன்னிங்ஸ்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்துள்ளது.
3. நிதி ஆயோக் வெளியிட்ட இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியல்: பீகார் முதலிடம்
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியலில் பீகார் முதலிடத்தில் உள்ளது.
4. இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும்; பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன்
மும்பை தாக்குதலின் 13-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
5. கான்பூர் டெஸ்ட்: இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட்
கான்பூர் டெஸ்ட்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 345 ரன்கள் குவித்துள்ளது.