தேசிய செய்திகள்

அரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே புதிய சட்டம் + "||" + Haryana: 75 percent private jobs reserved for locals, govt clears ordinance

அரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே புதிய சட்டம்

அரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே புதிய சட்டம்
அரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே என்ற மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
சண்டிகார்: 

தனியார் துறை வேலைகளில் மாநில இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா ஒன்றை கொண்டுவருவதற்கான திட்டத்திற்கு அரியானா அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. 

இந்த அவ்ரைவு மசோதா அடுத்த கூட்டத்தில் அமைச்சர்கள் சபை முன் வைக்கப்படும். பாஜக கூட்டணி கட்சியான துஷ்யந்த் சவுதாலாவின் ஜன்னாயக் ஜனதா கட்சி, தேர்தல்களில், முக்கியமாக தனியார் துறை வேலைகளில், மாநில இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக உறுதியளித்திருந்தது.

அதன்படி அரியானாவில் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்கும் வரைவு மசோதா கொண்டுவரப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து இதற்கு அமைச்சரவை ஒப்புதலும் அளிக்கப்பட்டு உள்ளது. இது அரியானா மாநில இளைஞர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று துஷ்யந்த் கூறியுள்ளார்.

கூட்டத்திற்குப் பிறகு, சவுதாலா, இன்று அரியானாவின் இளைஞர்களுக்கு ஒரு வரலாற்று நாள், ஏனெனில் இப்போது தனியார் துறை தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் அரியானாவின் இளைஞர்களுக்கு 75 சதவீத வேலைகளை வழங்குவது கட்டாயமாக இருக்கும்" என கூறினார்


தொடர்புடைய செய்திகள்

1. அரியானாவில் இன்று மேலும் 1,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அரியானாவில் இன்று மேலும் 1,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஆச்சரியம் ஆனால் உண்மை...குழந்தை மீது ஏறிய சரக்கு ரெயில்.. காயமின்றி உயிர் தப்பிய சம்பவம்
அரியானாவில் சரக்கு ரெயில் சிறுவன் மீது ஏறி சிறுகாயமின்றி தப்பிய அச்சரிய சம்பவம் ஒன்று நிழந்து உள்ளது.
3. கொரோனா தொற்றை கையாண்ட சீன அதிபரை விமர்சித்த தொழில் அதிபருக்கு 18 வருட சிறை
சீன அதிபர் ஜி ஜின்பிங் கொரோனா தொற்றை கையாண்டதை விமர்சித்த தொழில் அதிபருக்கு 18 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
4. சீனாவின் 3 கொரோனா தடுப்பூசிகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது
சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
5. அரியானாவில் இன்று மேலும் 2,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அரியானாவில் இன்று மேலும் 2,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.