தேசிய செய்திகள்

சீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி + "||" + Why was China allowed to justify its position? - Rahul Gandhi Question

சீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி

சீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி
இந்திய வீரர்கள் 20 பேரை படுகொலை செய்த சம்பவத்தில் சீனா தனது நிலைப்பாட்டை நியாப்படுத்த இந்திய அரசு அனுமதித்தது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,

லடாக் எல்லைப் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்க்ளுக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய அரசின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.


இது தொடர்பாக அவ்வபோது தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வரும் அவர், இந்த சம்பவத்தை முறையாக அரசு கையாளவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதில், தேச நலனை காப்பது இந்திய அரசின் தலையாய கடமை என குறிப்பிட்டுள்ள அவர், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து சீனா தனது துருப்புக்களை திரும்பப் பெற்றது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், கால்வான் பள்ளத்தாக்கின் இறையாண்மை பற்றிய தெளிவான தகவல்  இடம்பெறாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில், முன்பிருந்த இருந்த நிலையே தொடர வேண்டும் என ஏன் இந்தியா வலியுறுத்தவில்லை? என்றும் நமது மண்ணில் ஊடுருவி ஆயுதங்களற்ற 20 இந்திய ராணுவ வீரர்களை படுகொலை செய்த சம்பவத்தில், சீனா தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்? எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு : லட்சக்கணக்கானோருக்கு பரிசோதனை
உலகில் முதன் முதலாக தொற்று பாதிப்பு வெளிப்பட்ட சீனாவில், இதுவரை 86 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. பூட்டானிய எல்லைக்குள் ஊடுருவி இந்தியாவின் டோக்லாமிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீனா- செயற்கைகோள் படங்கள்
சீனா பூட்டானிய எல்லைக்குள் டோக்லாம் பீடபூமியின் கிழக்கு பகுதியில் இரண்டு கிலோமீட்டர் ஊடுருவி சுமார் 9 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு சாலையைக் கட்டியுள்ளது என உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள் காட்டுகிறது.
3. கொரோனாவை தடுக்க அவசர பயன்பாடாக சீனாவில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி
சீனாவில் கொரோனாவை தடுப்பதற்காக, அவசர பயன்பாடாக சைனோபார்ம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு செலுத்தி உள்ளனர்.
4. தவறான வரைபடம் : இந்தியாவிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரியது டுவிட்டர்
லடாக்கினை சீனாவின் பகுதியாக சித்தரித்து தவறான இந்திய வரைபடம் வெளியிட்ட விவகாரத்தில் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனம் இந்திய அரசிடம் மன்னிப்புக் கோரியது.
5. சீனாவின் கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது - விஞ்ஞானிகள் தகவல்
சீனாவின் கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு சக்தியை தூண்டுவதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.