பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசிலியா,
தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தனது வழக்கமான அலுவலக பணிகளை மேற்கொள்ள அலுவலகம் வராமல் தவிர்த்தார். தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவலை அதிபர் போல்சனாரோ இன்று டி.வி. வாயிலாக அளித்த பேட்டியில் தெரிவித்தார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல் நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :
Next Story