மாநில செய்திகள்

சென்னையில் ஜுலை மாதத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது? + "||" + In the month of July in Chennai Corona Is gradually decreasing?

சென்னையில் ஜுலை மாதத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது?

சென்னையில் ஜுலை மாதத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது?
சென்னையில் ஜுலை மாதத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஜூன் மாதத்தில் இருந்து தினமும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது.அதுவும் ஜூன் மாதம் இறுதியில் நாளொன்றுக்கு சென்னையில் கொரோனா பாதிப்பு 2000 தாண்டியே பதிவானது. ஜூன் 30 தேதி அதிகபட்சமாக 2393 பேருக்கு கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னை மக்களின் எதிப்பார்ப்பிற்கு நம்பிக்கையூட்டும் விதமாக சென்னையில் கடந்த 7 நாட்களாக அதாவது ஜூலை மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

சென்னையில் ஜூன் 30ம் தேதி 2393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுசிசெய்யப்ட்ட நிலையில் ஜூலை 1-ம் தேதி பாதிப்பு குறைந்து 2182 பேருக்கு உறுதிசெய்யப்பட்டது.ஜூலை 2ம் தேதி  2027 பேருக்கும், ஜூலை 3-ம்  தேதி பாதிப்பு சற்று அதிகரித்து 2082 பேருக்கும் உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து ஜுலை 4-ம் தேதியில் பாதிப்பு கணிசமாக குறைந்து  1842 ஆக குறைந்தது. ஜூலை 5-ம் தேதி பாதிப்பு  1713 ஆகவும், ஜூலை  6-ம் தேதி சற்று அதிகரித்து  1747 ஆகவும் இருந்த பாதிப்பு, ஜூலை 7-ம் தேதியான நேற்றைய தினம் நம்பிக்கையூட்டும் விதமாக  1203 ஆக குறைந்துள்ளது.

இதனால் சென்னையில் ஜூலை மாதத்தில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குளிர்ந்த காற்றுடன் சென்னையில் இதமான சாரல் மழை: ரம்மியமான காலநிலை நிலவியது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் மாலை வரை குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்ததன் காரணமாக ரம்மியமான காலநிலை நிலவியது.
2. பயணிகள் விமானப்போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்ப 4 ஆண்டுகள் ஆகும்..!!!
சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்ப 4 ஆண்டுகள் வரையில் ஆகும் என, சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
3. கொரோனா கால மோசடிகள்; வருகிற 27ஆம் தேதி ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்
மு.க.ஸ்டாலின் தலைமையில் வருமகிற 27ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. சென்னை கொரோனா நிலவரம்: தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்
இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல் விவரம் வருமாறு:-
5. சென்னையில் கொரோனா பாதிப்பு 85,859; சிகிச்சையில் 15,042 பேர்
சென்னையில் கொரோனா தொற்றால் 85,859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் பலி எண்ணிக்கை 1,434 உயர்ந்து உள்ளது.