மாநில செய்திகள்

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் + "||" + Continue to provide free electricity to farmers Chief Minister's letter to Union Minister

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை

சென்னை தலைமை செயலகத்தில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத்திருத்தம் குறித்து முதல்வர் பழனிசாமியுடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்கே. சிங் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இந்த சந்திப்பு நடைபெற்றது என்பதும் குறிப்பிட்டத்தக்கது.மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில முக்கியக் கோரிக்கையை முன் வைத்து கடிதம் அளித்தார்.

தமிழக அரசின் இலவச மின்சார திட்டத்துக்கு எதிரான பிரிவை நீக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் நிலையாக வழங்க வேண்டும் என்பது மட்டுமே தமிழக அரசின் கொள்கை என்றும் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம்: கண்தான இணையதளத்தை தொடங்கி வைத்தார்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்தார். மேலும் கண்தான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
2. கடலூருக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு
கடலூருக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
3. மாவட்டத்திற்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வருகை - ரூ.243½ கோடியில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
நாமக்கல் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வருகிறார். இதையொட்டி அவர் ரூ.243 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
4. திருப்பத்தூருக்கு 24-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் வருகை - புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார்
திருப்பத்தூருக்கு வருகிற 24-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிறார். அவர், புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.
5. கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு
கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.