மாநில செய்திகள்

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 5 போலீசார் கைது + "||" + Five more policemen arrested in connection with Sathankulam father son death

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 5 போலீசார் கைது

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 5 போலீசார் கைது
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி,

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் தாக்கியத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதனை கொலை வழக்காக மாற்றி, சம்பந்தப்பட்ட 5 போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


சம்பவம் நடந்த தினத்தன்று காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் அனைவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று இரவு 14 காவலர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அனைவரிடமும் நடத்தப்பட்ட விசாரணை இன்று மாலை 7 மணிக்கு முடிவுக்கு வந்தது.

விசாரணையின் முடிவில் காவல் உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது கொலை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட அதே வழக்குகள், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 5 பேர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரும் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தந்தை-மகன் கொலையை உறுதிப்படுத்தியது எப்படி? சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை விவரம் வெளியானது
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலையை உறுதிப்படுத்தியது எப்படி? என்பது தொடர்பாக மதுரை கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை விவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு: குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில், குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
3. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: கோவில்பட்டி சிறையில் சி.பி.ஐ., தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக, கோவில்பட்டி சிறையில் சி.பி.ஐ., தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
4. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆவணங்கள் சேகரிப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆவணங்களை சேகரித்தனர்.
5. சாத்தான்குளம் சம்பவம்: தந்தை - மகன் உடலில் 30 இடங்களில் காயங்கள்; நீதிபதி தகவல்
சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததாக தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதி, போலீஸ்காரர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.