தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மேலும் 301 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + 301 fresh cases take kerala State’s tally to 6,000

கேரளாவில் இன்று மேலும் 301 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் இன்று மேலும் 301 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் இன்று புதிதாக 301 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம், 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளாவில் பெருமளவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 301 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,195 ஆக அதிகரித்துள்ளது.

இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 99 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 95 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும், 90 பேர் தொடர்பில் இருந்தவர்களுக்கும் உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை, 3,561 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,605 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1,85,546 பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும், மாநிலத்தில் தற்போது 169 கொரோனா ஹாட்ஸ்பாட்கள் பகுதிகள் உள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று மேலும் 962 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் இன்று மேலும் 962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. "கேரளாவில் வியாழக்கிழமை வரை கனமழை பெய்யக்கூடும்" - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கேரளாவில் வியாழக்கிழமை வரை கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. கேரளாவில் மேலும் 1,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் மேலும் 1,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரள மாநிலத்தில் இன்று 1,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரள மாநிலத்தில் இன்று 1,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் மேலும் 1,310 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் இன்று மேலும் 1,310 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.