தேசிய செய்திகள்

சட்ட விதிமுறைகளை மறுஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் + "||" + Order to the Federal Government to review the rule of law: Petition to the Supreme Court

சட்ட விதிமுறைகளை மறுஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

சட்ட விதிமுறைகளை மறுஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
‘லாக்-அப்’ மரணம், பாலியல் கொடுமை வழக்குகளில், சட்ட விதிமுறைகளை மறுஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டில் டெல்லியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில், ‘லாக்-அப்’ மரணம், சித்ரவதை, கைதிகள் மீது பாலியல் வன்கொடுமை போன்ற அத்துமீறல்கள் இந்தியாவில் வழக்கமான சம்பவங்களாகி உள்ளன. எனவே சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு கோர்ட்டு மேற்பார்வையில் பிரத்யேகமாக ஒரு குழுவை அமைத்து தற்போது இந்தியாவில் ‘லாக்-அப்’ மரணங்கள், சித்ரவதை, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்ட விதிமுறைகள் குறித்து மறுஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவில் சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணையின்போது தந்தை-மகன் இறந்தது குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிய கல்விக்கொள்கை: முதல் அமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் கேபி அன்பழகன் நாளை ஆலோசனை
புதிய கல்விக்கொள்கை: முதல் அமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் கேபி அன்பழகன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்
2. புதிய கல்விக்கொள்கை - மாற்றங்கள் என்ன? உயர்கல்வித்துறை செயலர் விளக்கம்
புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
3. எனது எச்சரிக்கையை கேட்க மறுக்கிறார்கள் ; மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
கொரோனா குறித்தும், இந்திய பொருளாதாரம் குறித்தும் நான் தொடர்ந்து எச்சரித்து வந்தேன்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என்று மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
4. ஹேக்கிங் பிரச்சினை: டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்
ஹேக்கிங் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் விடுத்துள்ளது.
5. கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் ஆதித்ய தாக்கரே மனு தாக்கல்
கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்ற யுஜிசி உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆதித்ய தாக்கரே மனு தாக்கல் செய்துள்ளார்.