மாநில செய்திகள்

ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்! + "||" + Chief Minister Edappadi Palanisamy has written to Prime Minister Modi.

ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!
ஓபிசி பிரிவினருக்கு தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையை, மத்திய அரசு பணியிலும் பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் ப்பதாவது:-

மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக நடக்கும் நியமனங்களில் ஓ.பி.சி. என்ற இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அளிக்கிறது. ஆனாலும் ஓ.பி.சி. பிரிவில் கிரிமிலேயர் வகைக்கு உட்பட்டவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு பொருந்தாது.

ஓ.பி.சி.யில் கிரிமிலேயர் பிரிவுக்கு வராதவர்கள் என்பதை கணிக்க 6 தகுதிகள் கணக்கிடப்படுகின்றன. கிரிமிலேயர் பிரிவை முடிவு செய்வதற்கான அளவுகோலில் ஒன்று, வருமான வரம்பாகும்.

அந்தப் பிரிவில் வருபவரின் வருமான வரம்பு, ஆண்டொன்றுக்கு ரூ.1 லட்சம் என்று 1993-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து, வருமான வரம்பு ரூ.8 லட்சமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில், ஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவினருக்கான தகுதியை நிர்ணயிப்பதில், சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை உட்படுத்தி, அதை திருத்துவதற்கு மத்திய அரசு முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இடஒதுக்கீடும், நலத் திட்டங்களைப் பெறும் கிரிமிலேயர் பிரிவினர் யார் என்பதை முடிவு செய்யும்போது, சம்பளமும், விவசாய வருமானமும் அவர்களின் வருவாயில் தற்போது சேர்க்கப்படுவதில்லை. இந்த இரண்டையும் பெற்றவர்களின்ஒட்டுமொத்த வருவாயுடன் சேர்த்து கணக்கிட்டால், பல தகுதியுள்ள ஓ.பி.சி.யினரை மத்திய அரசின் நலத் திட்டங்கள் மற்றும் அரசுப் பணிகளை பெற முடியாமல் செய்துவிடும்.ள

எனவே கிரிமிலேயர் பிரிவினரை முடிவு செய்வதில் சம்பள வருவாய் மற்றும் விவசாய வருவாயை சேர்க்காமல், தற்போதுள்ள கொள்கையே நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் தமிழக அரசை மாதிரியாக மத்திய அரசு கொள்ள வேண்டும். இதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து ஓ.பி.சி. பிரிவினரும் சம வாய்ப்பைப் பெறுவதோடு, முழு சமூகநீதியை அளிக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய குடியரசு தின கொண்டாட்டம்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக அழைப்பு
குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிறப்பு விருந்தினராக இந்தியா அழைப்பு விடுத்து உள்ளது.
2. டிசம்பர் 15-ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2000 மினி கிளினிக்குகள் -முதல்வர் பழனிசாமி
டிசம்பர் 15-ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2000 மினி கிளினிக்குகள் தொடங்கப்ப்டும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
3. அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
4. புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி வரும் டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
5. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்: பிரதமர் மோடி
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியமானது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.