தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல் + "||" + Corona virus infection in India is not socially widespread - Health Minister Harshavardhan

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்
இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷர்தன் தலைமையில் நாட்டில் கொரானா பரவலை கட்டுப்படுத்துவது, மருத்துவ கட்டமைப்பு வசதிகள் குறித்து விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் பூரி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன், நாட்டில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என நிபுணர்கள் தெரிவித்ததாக கூறினார். ஒரு சில பகுதிகளில் தொற்று அதிகமாக உள்ள நிலையில், சமூக தொற்றாக மாறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில், மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். உலகில் பத்து லட்சம் பேருக்கு ஆயிரத்து 453 பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் 538 ஆக உள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-சீனா இடையே தொடரும் பதற்றம்: எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் - முப்படைகள் தளபதி பிபின் ராவத்
இந்தியா-சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாக முப்படைகள் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
2. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் 834- பேர் உயிரிழந்துள்ளனர்.
3. வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை கடந்தது
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 62,064 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 லட்சத்தை கடந்தது.
5. இந்தியாவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா - பாதிப்பு 21 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. மொத்த பாதிப்பு, 21 லட்சத்தை தாண்டி உள்ளது.