மாநில செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை வந்தனர் + "||" + CBI to investigate Sathankulam case Officers came to Madurai

சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை வந்தனர்

சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை வந்தனர்
சாத்தான்குளம் வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காக 7 சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை வந்தனர்.
மதுரை,

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிழந்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.


இதனை தொடர்ந்து விசாரணையை தொடங்குவதற்காக டெல்லியில் இருந்து விஜயகுமார் சுக்லா தலைமையிலான 7 சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் மதுரையில் இருந்து கார் மூலமாக தூத்துக்குடி செல்ல உள்ளனர். சி.பி.ஐ. அதிகாரிகள் இரு குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றிய அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய இடங்களான சாத்தான்குளம் காவல்நிலையம், கோவில்பட்டி சிறைச்சாலை, தூத்துக்குடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்ட பிறகு விசாரணையை தொடர்ந்து நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: பென்னிக்ஸ் நண்பர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை வாக்குமூலத்தை பதிவு செய்தனர்
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக, பென்னிக்சின் நண்பர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
2. சாத்தான்குளம் சம்பவம்:ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை வீடியோ வெளியானதா?‘வாட்ஸ்-அப்’பில் பரவும் காட்சிகளால் பரபரப்பு
சாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை வீடியோ வெளியானதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
3. சாத்தான்குளம் போலீசார் தாக்கியதாக வழக்கு: தொழிலாளியிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
சாத்தான்குளம் போலீசார் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக, தொழிலாளியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
4. நகை, பணம் கொள்ளை: தொழில் அதிபர் கடத்தலில் மூளையாக செயல்பட்ட நண்பர் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
வில்லியனூர் அருகே தொழில் அதிபரை காரில் கடத்தி நகை, பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட அவரது நண்பர் உள்பட 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
5. சாத்தான்குளம் போலீசார் மீது புகார்: தொழிலாளியிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
சாத்தான்குளம் போலீசார் மீது புகார் கூறிய தொழிலாளியிடம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார்.