மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி + "||" + No corona damage to Edappadi Palanisamy: confirmed on examination

எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி

எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி
எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
சென்னை, 

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 8-ந் தேதி மின்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கும், அவரது மகன் தரணிதரனுக்கும் பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

அமைச்சர் பி.தங்கமணி 7-ந் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அதற்கு முந்தைய நாள் (6-ந்தேதி) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். எனவே, அமைச்சர் பி.தங்கமணியை சந்தித்தவர்கள் எல்லாம் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர்.

அந்த வகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவரது அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொண்டனர்.

இந்தநிலையில், பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது. அதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் உற்சாக வரவேற்பு: எடப்பாடி பழனிசாமி இன்று ராமநாதபுரம் வருகை
நேற்று மதுரை வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் இன்று, ராமநாதபுரம் சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.
2. பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை வரதட்சணை கொடுமைக்கு 10 ஆண்டு ஜெயில் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கொடுமைகளுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கவும் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
3. தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே நீடிக்கும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்தார்.
4. பொதுமக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வுகாண முதல்-அமைச்சரின் உதவி மையம்-சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பொதுமக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வுகாண முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட உள்ளதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
5. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்பு ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு
ஆண்டிப்பட்டி அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.