கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் இயல்புக்கும் அதிகமாக சர்க்கரை இருந்தால் மரணங்கள் நிகழ்கிறது
புதிய மருத்துவ ஆய்வில் கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் இயல்புக் மகும் அதிகமாக சர்க்கரையின் அளவு இருந்தால் அதன் மூலம் அதிக மரணங்கள் நிகழ்வதாக தெரிய வந்துள்ளது.
பீஜிங்
கொரோனா உற்பத்தியிடமான சீனாவின் உகானில் மேற்கொள்ளப்பட்ட புதிய மருத்துவ ஆய்வில் கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் இயல்புக்கும் அதிகமாக சர்க்கரையின் அளவு இருந்தால் அதன் மூலம் அதிக மரணங்கள் நிகழ்வதாக தெரிய வந்துள்ளது.
உகான் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழக யூனியன் மருத்துவமனை மற்றும் டோங்கி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் யிங் ஜின் மற்றும் இவரது சகாக்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின் கண்டுப்பிடிப்புகள் டயாபெடாலாஜியாஎன்ற இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வுக்காக மரணமடைந்த 114 கொரோனா நோயாளிகள் உட்பட 605 கொரோனா நோயாளிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இதில் 34ச் சத்வீதம் அதாவது 208 நோயாளிகளுக்கு முன்னமேயே ரத்த சர்க்கரை அளவு சோதிக்கப்படாத நிலையில் இவர்களின் ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை இருப்பது தெரியவந்தது. 29 சதவீத நோயாளிகளுக்கு டைப் 2 வகை நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 17 சதவீத நோயாளிகள் சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகளில் இருந்தனர்.
எனவே ரத்தத்தில் உயர்ந்த சர்க்கரை, இவர்கள் நீரிழிவு நோயாளிகளாக இருந்தாலும் சரி, அல்லது நோய்கணிக்கப்படாத ஆனால் ரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பவர்களாக இருந்தாலும் சரி கொரோனா நோய் ஏற்பட்டால் மரண விகிதம் அதிகமாக உள்ளது. மேலும் ரத்தத்தில் சர்க்கரை இருந்து கொரோனாவினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் இன்சுலினையும் தடுத்து விடும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
ஹைபர்கிளைசீமியாவினால் ரத்தக்கட்டு, ரத்தக்குழாய் சுவர்கள் மோசமடைவது, நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிலிருந்து மேலதிகமாக உருவாகும் சைட்டோகைன்களினால் ஏற்படும் அழற்சி நிலைகள் ஆகியவற்றினால் மரணங்கள் அதிகம் நிகழ்கிறது.
எனவே கொரோனா நோயாளிகளுக்கு நீரிழிவு உள்ளதா, ரத்தத்தில் சர்க்கரை அளவு, சர்க்கரைக் கட்டுப்பாட்டு அளவுகோல்கள் ஆகியவை சோதிக்கப்படுவது அவசியம் என்று இந்த ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story