தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா + "||" + Baby born to Delhi woman cured of Covid-19 tests positive; doctors claim first such case in India

கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா

கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா
டெல்லியில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து, குணமடைந்த தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி

உலகிலேயே முதல் முறையாக கருவில் இருக்கும் சிசுவுக்கு கொரோனா பாதிப்பு தாய் மூலம் ஏற்பட்டிருப்பதாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதுவரை, பிறந்த குழந்தைக்கு, கொரோனா நோயாளிகள் மூலம்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பாதித்த தாய்க்குப் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

ஜூன் 11ம் தேதி 24 வயது கர்ப்பிணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதே சமயம், சிகிச்சைக்குப் பிறகு 25ம் தேதி மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோதும் கொரோனா இருப்பதாகவே வந்தது. பிறகு ஜூலை 7ம் தேதி மீண்டும் பரிசோதித்ததில் கொரோனா இல்லை என்று பரிசோதனை முடிவு வந்தது.

ஜூலை 8-ம் தேதி இரவு கர்ப்பிணிக்கு சுகப் பிரசவத்தில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 6 மணி நேரத்தில் ஆர்டி-பிசிஆர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தை நலமாக இருக்கிறது. குழந்தைக்கு எந்த அறிகுறியும் இல்லை. 

48 மணி நேரம் கழித்து மீண்டும் குழந்தைக்கு பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.கொரோனாவில் இருந்து குணமடைந்த தாய்க்கு, கொரோனா பாதிப்பு இருக்கும் குழந்தை பிறந்திருப்பது இந்த பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவர் கீர்த்தி தெரிவித்துள்ளார்.

அதே சமயம் குழந்தைக்கு வெளியில் இருந்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட எந்த வழியும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 67 ஆயிரம் பேருக்கு தொற்று: பலி எண்ணிக்கையும் உயர்ந்தது
இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 67 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
3. இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையவில்லை - பிரதமர் மீது ராகுல் காந்தி சாடல்
இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையவில்லை என்று பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
4. டெல்லியில் இன்று மேலும் 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் கனமழை: கடும் போக்குவரத்து நெரிசல்
டெல்லியில் இன்றும் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...