மாநில செய்திகள்

சென்னையில் மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிஷ்ணன் + "||" + The impact of corona has started to decrease due to the cooperation of the people in Chennai - Health Secretary Radhakrishnan

சென்னையில் மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிஷ்ணன்

சென்னையில் மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிஷ்ணன்
சென்னையில் மக்கள் ஒத்துழைப்பு தந்ததால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 74,969 ஆக உயர்ந்துள்ளது.


இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, “தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம்.

தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மக்கள் ஒத்துழைப்பு தந்ததால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
2. பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா
பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
3. சுதந்திரதின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற புதுவை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா
சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருடன் கலந்து கொண்ட மற்ற போலீஸ் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
4. கொரோனாவில் இருந்து மீண்ட சித்தராமையா வீடு திரும்பினார் ஒரு வாரம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார். ஒரு வாரம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
5. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் பலி
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...