மாநில செய்திகள்

வரும் 17ல் ஈரோடு வருகிறார் முதலமைச்சர் - செங்கோட்டையன் தகவல் + "||" + The Chief Minister is coming to Erode on the 17th

வரும் 17ல் ஈரோடு வருகிறார் முதலமைச்சர் - செங்கோட்டையன் தகவல்

வரும் 17ல் ஈரோடு வருகிறார் முதலமைச்சர் - செங்கோட்டையன் தகவல்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 17ஆம் தேதி ஈரோடு வர உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு,

ஈரோட்டில் அனைத்து துறை சார்ந்த அலுவலகர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்றைய தினம் மாவட்டத்தில் முழுமை பெற்ற அரசின் பல்வேறு நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக கூறினார். அதேபோல், புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

மேலும் இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு இ-பாக்ஸ் எனும் நிறுவனத்தின் மூலமாக, முதல்வர் ஆன்லைன் வகுப்புகளை 14-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். அவர் தொடங்கி வைத்தவுடன் இந்த வகுப்புகள் புதிய வரலாற்றைப் படைக்கும் விதமாக அமையும். ஒரு மாணவர் ஒரு வகுப்பு என்றால் அதற்காக தனித்தனி நேரம் ஒதுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.


ஆசிரியரின் தேர்வுகள்...