தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infected 1,781 people in one day in New Delhi confirmed today

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லி மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,921 ஆக அதிகரித்துள்ளது.


இன்று ஒரே நாளில் 34 உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,334 ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87,692 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது 19,895 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் வேகமாக உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு - ஒரேநாளில் புதிதாக 178 பேருக்கு தொற்று
புதுச்சேரியில் புதிதாக 178 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது.
2. புதிதாக 215 பேருக்கு தொற்று: தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது
தூத்துக்குடியில் புதிதாக 215 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது. நெல்லை, தென்காசியில் 2 பேர் பலியானார்கள்.
3. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்குகிறது.
4. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 357 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 13,654 ஆக அதிகரிப்பு
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 357 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 13,654 ஆக உயர்ந்தது.
5. டெல்லியில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.