மாநில செய்திகள்

எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்; புதுச்சேரி பாகூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு + "||" + Disqualification of MLA Dhanavel; Puducherry Bahour constituency declared vacant

எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்; புதுச்சேரி பாகூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு

எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்; புதுச்சேரி பாகூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு
எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரி பாகூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,

புதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். ஆனால் கட்சித் தலைமைக்கு எதிராக, அரசின் மீது புகாரளித்து ஆளுநரிடம் மனு அளிப்பது என்று செயல்பட்டதால் அதிருப்தி எம்.எல்.ஏவாக கருதப்பட்டு வந்தார்.


இந்நிலையில் எம்.எல்.ஏ தனவேல் அவரது பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுவதாக புதுச்சேரி சட்டபரவை சபாநாயகர் சிவகொழுந்து நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்தார். புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேல் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று சபாநாயகர் சிவகொழுந்து புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போது, தனவேல் தகுதி நீக்கம் தொடர்பான கடிதம் தேர்தல் துறைக்கு அனுப்பப்பட்டதால் பாகூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் பிரச்சினை: தி.மு.க. மனுவுக்கு பதில் அளிக்க சபாநாயகருக்கு நோட்டீஸ் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் பிரச்சினை தொடர்பாக தி.மு.க. தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சபாநாயகர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...