உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.28 கோடியாக உயர்வு


உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.28 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 12 July 2020 6:57 AM IST (Updated: 12 July 2020 6:57 AM IST)
t-max-icont-min-icon

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.28 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.  கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடே தடுமாறி வருகிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.  

ஐரோப்பிய நாடுகளில் கணிசமாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உலக அளவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,28,39,566 -ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  5,67,574- ஆக உள்ளது. அதேபோல், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  7,47,7,683-ஆக உள்ளது.

அமெரிக்காவில் 3,355,646 -பேருக்கும் பிரேசிலில்  1,840,812 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விரு நாடுகளும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்த இரண்டு நாடுகளும் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களை வகிக்கின்றன.


Next Story