தேசிய செய்திகள்

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + 3 terrorists shot dead in Kashmir

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர், 

வடக்குகாஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ரீபான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், ராஷ்டிரிய ரைபிள் பிரிவினரும், காஷ்மீர் தனிப்படை போலீசாருடன் நேற்று அதிகாலை 4 மணிக்கு விரைந்து சென்றனர். முன்னதாக அந்தப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் செல்போன், இணையதள சேவையும் முடக்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதும் பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பயங்கர ஆயுதங்களும் சிக்கின. தப்பி ஓடிய மற்ற பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம்: தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை
காஷ்மீரில் பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம் செய்து தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது.
2. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் வீசிய 4 வெடிக்காத குண்டுகள் அழிப்பு
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் வீசிய 4 வெடிக்காத குண்டுகள் அழிக்கப்பட்டது.
3. காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
4. காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
5. காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் - போலீஸ் ஐ.ஜி. தகவல்
காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் என காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...