தேசிய செய்திகள்

சொன்னேன் அல்லவா...? காங்கிரசில் திறமைக்கு மதிப்பில்லை சச்சின் பைலட்டை அழைக்கும் ஜோதிராதித்ய சிந்தியா + "||" + Told You So: Jyotiraditya Scindia Tweet On Sachin Pilot

சொன்னேன் அல்லவா...? காங்கிரசில் திறமைக்கு மதிப்பில்லை சச்சின் பைலட்டை அழைக்கும் ஜோதிராதித்ய சிந்தியா

சொன்னேன் அல்லவா...? காங்கிரசில் திறமைக்கு மதிப்பில்லை சச்சின் பைலட்டை அழைக்கும் ஜோதிராதித்ய சிந்தியா
சொன்னேன் அல்லவா...? காங்கிரசில் திறமைக்கு மதிப்பில்லை சச்சின் பைலட்டுக்கு பா,ஜனதாவில் இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியா அழைப்பு விடுத்து உள்ளார்.
புதுடெல்லி

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கும், துணை முதல் மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

டெல்லி சென்றிருந்த சச்சின் பைலட் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாதி, ராகுல்காந்தியை சந்திக்க முடியவில்லை என்பதால் நேற்று ராஜஸ்தான் திரும்பினார். உடனேயே தனக்கு 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக வாட்ஸ்அப் குழுவில் அறிவித்தார். மேலும் அசோக் கெலாட் அரசு தற்போது பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், இன்று நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன் எனவும் அறிவித்தார்.

இந்நிலையில், சச்சின் பைலட் கட்சியில் ஓரங்கட்டப்பட்டு உள்ளதாக காங்கிரசின் முன்னணி தலைவராக இருந்தவரும், சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தவருமான ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் ராஜஸ்தான் துணை முதல் மந்திரி சச்சின் பைலட், முதல் மந்திரி அசோக் கெலாட்டால் ஓரங்கட்டப்பட்டு, துன்புறுத்தப்பட்டு உள்ளார். என்னைப்போல எனது சகாவும் துன்பப்படுவதை பார்க்க வருத்தமாக உள்ளது. காங்கிரசில் திறமைக்கு மதிப்பில்லை, சிறிதளவும் நம்பகத்தன்மை இல்லை  என்பதையே இது காட்டுகிறது என பதிவிட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரசை விட்டு விலகிய ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜ.க.வில் அடைக்கலமானார். அவருடன் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கட்சி தாவியதால் கமல்நாத் அரசு கவிழ்ந்து பா.ஜ.க. அரசு ஆட்சியமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் மேலும் 1,167 பேருக்கு கொரோனா தொற்று
ராஜஸ்தானில் மேலும் 1,167 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம் - டெல்லி கங்காராம் மருத்துவமனை தலைவர் தகவல்
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் உடல் நலம் முன்னேற்றுத்துடன், திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3. பா.ஜனதா எம்.பி அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தி
பா.ஜனதா எம்.பி.யும் ஊடகப்பிரிவு தலைவருமான அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு பிரியங்கா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
4. ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி:சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை வாபஸ் பெறும் விவகாரத்தில் கட்சியில் பிளவு
ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி:சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை வாபஸ் வாங்கும் விவகாரத்தில் கட்சியில் பிளவு ஏற்பட்டு உள்ளது.
5. ராஜஸ்தானில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் - மாநில அரசு உத்தரவு
ராஜஸ்தானில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.