தேசிய செய்திகள்

ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயில் ரகசிய அறையைத் திறப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு + "||" + Padmanabha Swamy Temple to be managed by ex-royal family, rules Supreme Court

ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயில் ரகசிய அறையைத் திறப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயில் ரகசிய அறையைத் திறப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவிலின் ரகசிய அறையைத் திறப்பது குறித்து நிர்வாகக் குழுவே முடிவு எடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
திருவனந்தபுரம்

நாட்டில் புகழ்பெற்ற திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று கேரள ஐகோர்ட் 2011-ம் ஆண்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் 9 ஆண்டுகளுக்குப்பின் சுப்ரீம்கோர்ட்  இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி சுப்ரீம் கோர்ட்  நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, யு.யு.லலித் ஆகியோர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவிலின் நிர்வாகத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் உரிமைகளை சுப்ரீம் கோர்ட்  உறுதி செய்துள்ளது.

சில கூடுதல் விதிமுறைகளை வகுத்துள்ளதுடன், கோயிலை நிர்வகிக்க புதிய நிர்வாக குழு அமைக்கப்பட வேண்டும். அதுவரை நீதிபதி தலைமையிலான குழு நிர்வகிக்கும் என சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் அளித்துள்ளது.

இதுவரை திறக்கப்படாத ரகசிய அறையைத் திறப்பது குறித்து நிர்வாகக் குழுவே முடிவு எடுக்கலாம் என்றும், குழுவில் இந்து மதத்தினர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்றும், மல்கோத்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...