தேசிய செய்திகள்

விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் குறித்து சுந்தர் பிச்சையுடன் பேசினேன் - பிரதமர் மோடி + "||" + Narendra Modi This morning, had an extremely fruitful interaction with @sundarpichai

விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் குறித்து சுந்தர் பிச்சையுடன் பேசினேன் - பிரதமர் மோடி

விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் குறித்து சுந்தர் பிச்சையுடன் பேசினேன் - பிரதமர் மோடி
விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் குறித்து சுந்தர் பிச்சையுடன் பேசினேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,

பிரதமர் மோடி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையுடன் இன்று காணொளிக்காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார்.
 
இருவருக்கும் இடையேயான இந்தச் சந்திப்பில், வேலை சூழலில் கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், மற்றும் தகவல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-


இன்று காலை, கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையுடனான கலந்துரையாடல் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்கள்,தகவல் பாதுகாப்பு குறுத்தும் விவாதித்தோம். கல்வி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் கூகுளின் செயல்பாடு குறித்தும் கேட்டறிந்தேன்.

குறிப்பாக இந்தியாவின் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்ற தொழில்நுட்பத்தின் ஆற்றலை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  கல்வி, கற்றல், டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை போன்ற பல துறைகளில் கூகுள் நிறுவனத்தின் புதிய முயற்சிகளைப் பற்றி மேலும் அறிந்து கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. நேர்மையாக வரி செலுத்துபவர்கள் நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர்கள்: பிரதமர் மோடி
நேர்மையாக வரி செலுத்துபவர்கள் நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
2. நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
3. கொரோனா பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி - பிரதமர் மோடி
கொரோனா பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்-மந்திரிகள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
4. ரூ.1 லட்சம் கோடி வேளாண்மை அடிப்படை கட்டுமான வசதி நிதி திட்டம்- பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிதி திட்டத்தை நிறைவேற்ற மத்திய மந்திரிசபை ஏற்கனவே ஒப்புதல் அளித்து உள்ளது.
5. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம் - பிரதமர் மோடி
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம் என பிரதமர் மோடி கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...