மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,549 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Tamil nadu reports single day highsest spike as 4, 549 covid 19

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,549 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,549 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  தலைநகர் சென்னையில் தற்போது கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ள போதிலும் பிற மாவட்டங்களில் தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,56,369 ஆக உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 5,106  பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருநாளில் 1,157- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரு நாளில் 69 உயிரிழந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.10 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.10 கோடியை தாண்டியுள்ளது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 -பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் 834- பேர் உயிரிழந்துள்ளனர்.
4. ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன ?
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக உலகமெங்கும் ஏறத்தாழ 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
5. தமிழ்நாடு உள்பட கொரோனா அதிகம் பாதித்த 8 மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை
தமிழ்நாடு உள்பட கொரோனா அதிகம் பாதித்த 8 மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...