இந்தியா - சீனா மக்களிடையே அமைதி காக்க முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறேன்- டொனால்டு டிரம்ப்


இந்தியா - சீனா மக்களிடையே அமைதி காக்க முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறேன்- டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 17 July 2020 3:43 AM GMT (Updated: 2020-07-17T09:13:40+05:30)

இந்தியா மற்றும் சீனா மக்களிடையே அமைதி காக்க முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகை செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும் போது 

நான் இந்திய மக்களை நேசிக்கிறேன், சீன மக்களையும் நேசிக்கிறேன்,இவர்களுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட எல்லாவற்றையும் செய்ய விரும்புகிறேன் என கூறினார்.
 
முன்னதாக வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் லாரி குட்லோ இந்தியாவை ஒரு சிறந்த நட்பு நாடு என்று வர்ணித்தார், ஜனாதிபதி டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த நண்பர் என்று கூறினார்.

கடந்த புதன்கிழமை வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, இந்தியா அமெரிக்காவின் சிறந்த பங்காளியாக இருந்துள்ளது என்று கூறினார்.

Next Story