மாநில செய்திகள்

சென்னையில் 90 சதவீதம் பேர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர்- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் + "||" + In Chennai, only 90 per cent people wear masks - Corporation Commissioner Prakash

சென்னையில் 90 சதவீதம் பேர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர்- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னையில் 90 சதவீதம் பேர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர்- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னையில் 90 சதவீதம் பேர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர். ஆனால் இதுமட்டும் போதாது. அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.
சென்னை: 

சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக சுமார் ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு ரூ.200 கோடியும் களப்பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூ.30 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. 

சென்னையில் 90 சதவீதம் பேர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர். ஆனால் இதுமட்டும் போதாது. அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதுதான் மாநகராட்சியின் நோக்கம். 

சென்னையில் மட்டும் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிகளவில் பரிசோதனை செய்வதால் அதில் வரக்கூடிய தரவுகள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

தற்போது 13 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்தாலும் 1,200 பேருக்குதான் கொரோனா என்ற நிலை உள்ளது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 15 கோடி விரைவான கொரோனா சோதனை கருவிகள் விநியோகிக்கும் திட்டம் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க அரசு அடுத்த சில வாரங்களில் 15 கோடி விரைவான, கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளை விநியோகிக்கும் என்று அறிவித்து உள்ளார்.
2. இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
3. நிமிடங்களில் கொரோனா சோதனை முடிவுகள்: புதிய சோதனைக்கருவிகள் விரைவில் அறிமுகம்
நிமிடங்களில் சோதனை முடிவுகளை கொடுக்கக்கூடிய கொரோனா சோதனைக்கருவிகள் விரைவில் உலகம் முழுவதும் கொண்டுவரப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
4. பா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதிக்கு கொரோனா மருத்துவமனையில் அனுமதி
பா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதி கொரோனா தொற்று காரணமாக ரிஷிகேசில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5. நிரூபிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை நாட்டுமக்களை கட்டாயப்படுத்தி ரகசியமாக பரிசோதனை செய்யும் சீனா
நிரூபிக்கப்படாதகொரோனா தடுப்பூசி சோதனை நாட்டுமக்களை கட்டாயப்படுத்தி ரகசியமாக பரிசோதனை செய்வதாக சீனா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...