தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 671 பேர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியது + "||" + In India, the corona killed 671 people in a per day

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 671 பேர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 671 பேர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 671 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டிவிட்டது.
புதுடெல்லி,

சீனாவில் உருவான ஆட்கொல்லி வைரசான கொரோனா, இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக தொடர்ந்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொரோனா தனது வலையில் விழ வைத்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், மராட்டிய மாநிலத்தில் 8,308 பேரும், தமிழகத்தில் 4,538 பேரும், கர்நாடகாவில் 3,693 பேரும், ஆந்திராவில் 2,602 பேரும், மேற்குவங்காளத்தில் 1,894 பேரும், பீகாரில் 1,825 பேரும், உத்தரபிரதேசத்தில் 1,722 பேரும், தெலுங்கானாவில் 1,478 பேரும், டெல்லியில் 1,462 பேரும், குஜராத்தில் 949 பேரும் என நாடு முழுவதும் மொத்தம் 34 ஆயிரத்து 884 பேர் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 38 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 லட்சத்து 53 ஆயிரத்து 751 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 3 லட்சத்து 58 ஆயிரத்து 692 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதேபோல மராட்டியத்தில் 258 பேரும், கர்நாடகாவில் 115 பேரும், தமிழகத்தில் 79 பேரும், ஆந்திராவில் 42 பேரும், உத்தரபிரதேசத்தில் 38 பேரும், மேற்குவங்காளம் மற்றும் டெல்லியில் தலா 26 பேரும், குஜராத்தில் 17 பேரும், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா 9 பேரும், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 8 பேரும், தெலுங்கானாவில் 7 பேரும், அரியானாவில் 5 பேரும், ஜார்கண்ட், பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 4 பேரும், அசாம் மற்றும் புதுச்சேரியில் தலா 3 பேரும், சத்தீஸ்கார் மற்றும் கோவாவில் தலா 2 பேரும், கேரளா மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவரும் என மொத்தம் 671 பேரின் உயிரை கொரோனா ஒரே நாளில் பறித்துள்ளது. இதனால் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 273 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், மராட்டிய மாநிலத்தில் மட்டும் 2 லட்சத்து 92 ஆயிரத்து 589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இந்த நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 452 ஆகும். பாதிப்பில் 2-வது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுடன் சேர்த்து 1 லட்சத்து 65 ஆயிரத்து 714 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. பலி எண்ணிக்கை 2,403 ஆக உயர்ந்து இருக்கிறது. மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-

டெல்லியில் பாதிப்பு 1,20,107 (உயிரிழப்பு 3,571), கர்நாடகா 55,115 (1,147), குஜராத் 46,430 (2,106), உத்தரபிரதேசம் 45,163 (1,084), தெலுங்கானா 42,496 (403), ஆந்திரா 40,646 (534), மேற்குவங்காளம் 38,011 (1,049), ராஜஸ்தான் 27,789 (546), அரியானா 24,797 (327), பீகார் 23,589 (201), மத்தியபிரதேசம் 21,081 (697), அசாம் 20,646 (51), ஒடிசா 16,110 (83), ஜம்மு காஷ்மீர் 12,757 (231), கேரளா 11,066 (38), பஞ்சாப் 9,442 (239), சத்தீஸ்கார் 4,964 (23), ஜார்கண்ட் 4,921 (46), உத்தரகாண்ட் 4,102 (51), கோவா 3,304 (21), திரிபுரா 2,366 (3), புதுச்சேரி 1,832 (25), மணிப்பூர் 1,800, இமாசலபிரதேசம் 1,417 (11), லடாக் 1,151 (1), நாகாலாந்து 956, சண்டிகார் 660 (11), அருணாசலபிரதேசம் 609 (3), தாதர்நகர் ஹவேலி 585 (2), மேகாலயா 403 (2), மிசோரம் 282, சிக்கிம் 266, அந்தமான் நிகோபார் தீவு 194.

நாட்டில் கொரோனா வேகமாக பரவி வரும் அதே வேளையில், அதனை கட்டுப்படுத்த பரிசோதனையை அதிகப்படுத்துவதுடன், நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி நாடு முழுவதும் தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நேற்று முன்தினம் வரை 1 கோடியே 34 லட்சத்து 33 ஆயிரத்து 742 பேரின் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தெரிவித்துள்ளது.