உலக செய்திகள்

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி சாதனை புரிந்த ஐக்கிய அரபு அமீரகம் + "||" + Hope probe: UAE launches historic first mission to Mars

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி சாதனை புரிந்த ஐக்கிய அரபு அமீரகம்

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி சாதனை புரிந்த ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க செவ்வாய் கிரகம் செல்லும் விண்கலம் ஜப்பானிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.
டோக்கியோ

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியநாடுகள் மட்டுமே  விண்வெளிக்கு விண்கலங்களை ஆய்வுக்கு அனுப்பி சாத்னை புரிந்து உள்ளன.  முதன் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி சாதனை புரிந்து உள்ளது.

கடந்த வாரமே இந்த விண்கலம் ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் மோசமான வானிலையால் விண்ணில் செலுத்தப்படவில்லை.

ஜப்பானில் உள்ள தனேகஷிமா என்னும் இடத்திலிருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம் எச்-2 ஏ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது செவ்வாய் கிரகத்தின் காலநிலை மற்றும் பருவநிலைகளை ஆராயும்.

அமெரிக்க நிபுணர்களிடம் பயிற்சி பெற்ற அமீரகத்தின் பொறியாளர்கள் இந்த விண்கலத்தை ஆறுமாதத்தில் உருவாக்கி உள்ளனர்.

கொலராடோபல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் மையத்திலும், துபாயில் உள்ள முகமது பின் ரஷீத் விண்வெளி மையத்திலும் இந்த செயற்கைக்கோள் உருவாக்கத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தங்களது அடுத்த திட்டத்தினை தாங்களே வடிவமைத்துக் கொள்ளும் அளவிற்கான ஆற்றல் அமீரகத்திற்கு வந்துவிட்டது என்கிறார் கொலராடோ பல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் மையத்தின் மூத்த பொறியாளர்.

இந்த செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தின் சூழல் குறித்து புதிய அறிவியல் தகவல்களை வழங்கும்.

தண்ணீரை உருவாக்கத் தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் இரண்டுமே செவ்வாயில் இருந்து வெளியேறிக்கொண்டே இருப்பது எப்படி என்பது குறித்து  அமீரகத்தின் விண்கலம் ஆய்வு நடத்துவதில் அதிக கவனம் செலுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை இயல்பாக்க பக்ரைன் சம்மதம்- டிரம்ப் தகவல்
ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை இயல்பாக்குவதற்கு பக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ளது
2. ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இஸ்ரேல் விமானங்கள் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த பக்ரைன் அனுமதி
ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இஸ்ரேல் விமானங்கள் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த பக்ரைன் அனுமதி அளித்துள்ளது.
3. ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை துண்டிக்க துருக்கி பரிசீலனை
இஸ்ரேலுடன் தூதரக ஒப்பந்தம் செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக, ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை துண்டிக்க துருக்கி பரிசீலனை செய்து வருகிறது.
4. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி தொடக்கம்: அதிகாரபூர்வ தகவல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி தொடங்க இருப்பதை ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் உறுதி செய்துள்ளார்.