மாநில செய்திகள்

திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி நடக்கிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு + "||" + An attempt is being made to portray DMK as anti-Hindu MK Stalin's accusation

திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி நடக்கிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி நடக்கிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
திமுகவை இந்து விரோத கட்சியாக சித்தரிக்க முயற்சி நடப்பதாக அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

திருவாரூர் கோயில் தேரோட்டம், மயிலாப்பூர் கோயில் தெப்பக் குளம் தூர்வாருதல் என தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோயிலின் திருப்பணியிலும் கவனம் செலுத்தி, கவனிப்பாரற்று இருந்த கோயில்களில் ஒரு கால பூஜையேனும் நடத்த திமுக ஆட்சி காலத்தில் வழிவகுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எந்த மதத்தின் மீதும் திமுகவுக்கு வெறுப்பு கிடையாது, எவரது நம்பிக்கையிலும் பழக்கவழங்கங்களிலும் குறுக்கிடுவதில்லை என்ற நிலையில், இந்து விரோதிகள் என்று விமர்சனத்தை வைத்து வளர்ச்சியை தடுத்து விடலாம் என அரதப் பழசான சிந்தனையை புதிய தொழில்நுட்பங்களின் வழியே புத்தம் புதிய காப்பியாக ரிலீஸ் செய்ய முயற்சி நடப்பதாக சாடியுள்ளார்.

பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் இத்தகைய சதிவேலைகளை செய்தபடியே, பெரும்பான்மை இந்து மக்களின் எதிர்கால வெளிச்சத்தை இருட்டாக்கிடும் வகையில் ஓபிசி பிரிவுனருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்திடும் வேலை நடப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

எங்கோ, எதுவோ ஒன்று நடந்தாலும் அதனை தொடர்புபடுத்தி திமுக மீது பழிசுமத்திட சிலர் ஆள்பிடித்து வைத்திருப்பதாக சாடியுள்ள ஸ்டாலின், சதிகாரர்களின் சமூக வலைதள வலைகளில் சிக்கி நேரத்தை வீணடித்திட வேண்டாம்” என்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 112-வது பிறந்தநாள்; அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் நாளை மாலை அணிவிக்கிறார்
பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
2. திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு: திமுக தலைவர், பொதுச்செயலாளர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு
திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3. வரும் 9-ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு
வரும் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
4. தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் - ஜே.பி.நட்டாவுக்கு ஸ்டாலின் பதில்
தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை: கு.க செல்வம்
திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை: என்று ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க செல்வம் தெரிவித்துள்ளார்.