மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்க போராட்டம் + "||" + DMK carry black flags all over Tamil Nadu

தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்க போராட்டம்

தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்க போராட்டம்
தமிழக அரசு மின் கட்டணக் கொள்ளையடிப்பதாகக் கூறி, அதிமுக அரசைக் கண்டித்து கறுப்புக் கொடியேந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டன முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை

திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் கடந்த 16-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மின்சாரத்தை கூடுதலாகப் பயன்படுத்தியதாக, மின்கட்டணத்தை பல மடங்கு வசூலிப்பதாக, அதனைக் கண்டித்து ஜூலை 21 அன்று வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி போராட வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் தங்களின் இல்லங்களின் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார். கையில் கறுப்புக்கொடியை ஏந்தி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்.

தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினார். தன் கையில், 'ஷாக் அடிப்பது மின்சாரமா, மின்கட்டணமா?' என எழுதப்பட்ட வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியிருந்தார்.

போராட்டத்தின்போது, 'ரீடிங்' எடுத்ததில் உள்ள குழப்பங்களை நீக்கி, மின் நுகர்வோருக்குச் சாதகமான முறையில் கணக்கிட்டு, ஊரடங்கு கால மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத் தொகைக்குரிய யூனிட்டுகளை கழிக்க வலியுறுத்தியும், அப்படிக் குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை எளிய மாதத் தவணையாகச் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்கக் கோரியும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், மத்தியப் பிரதேசம், கேரளா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா கால மின் கட்டணச் சலுகையை அளித்துள்ள நிலையில், அதிமுக அரசு மட்டும் மின் கணக்கீட்டின் அடிப்படையில் கட்டணத்தைச் செலுத்தியே ஆகவேண்டும் என்று சுமையை ஏற்றுவது கருணையற்ற போக்கு எனக்கூறி முழக்கங்களை எழுப்பினர்.

மக்களவை திமுக எம்.பி. கனிமொழி, சி.ஐ.டி. காலனியில் உள்ள தனது இல்லத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

அண்ணாசாலையிலுள்ள திமுக இளைஞர் அணி தலைமையகமான அன்பகத்தில், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். 

தொடர்புடைய செய்திகள்

1. கும்பகோணத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் 50 பேர் கைது
கும்பகோணத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி சட்ட நகலை எரித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் போராட்டம் 16 பேர் கைது
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்திய காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. திருச்சி காந்தி மார்க்கெட்டில் மீண்டும் தீ விபத்து: வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்; 183 பேர் கைது
திருச்சி காந்தி மார்க்கெட்டில் மீண்டும் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. உள்ளிருப்பு போராட்டம் நடத்திய 183 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
4. 112-வது பிறந்தநாள்; அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் நாளை மாலை அணிவிக்கிறார்
பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
5. திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு: திமுக தலைவர், பொதுச்செயலாளர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு
திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.