தேசிய செய்திகள்

மர்ம நபர்களால் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பத்திரிகையாளர் மரணம்; உ.பி. அரசு ரூ.10 லட்சம் அறிவிப்பு + "||" + Journalist Vikram Joshi’s family will get Rs10 lakh ex gratia: Yogi Adityanath

மர்ம நபர்களால் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பத்திரிகையாளர் மரணம்; உ.பி. அரசு ரூ.10 லட்சம் அறிவிப்பு

மர்ம நபர்களால்  துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பத்திரிகையாளர் மரணம்; உ.பி. அரசு ரூ.10 லட்சம் அறிவிப்பு
டெல்லி அருகே மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுடெல்லி

காசியபாத் அருகே கடந்த 20 ம் தேதி இரு மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற விக்ரம் ஜோஷி என்ற பத்திரிகையாளர் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த விக்ரம் ஜோஷி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி உத்தர பிரசேதம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். உள்ளூர் இந்தி பத்திரிகையில் வேலைபார்த்து வந்தார். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

விக்ரம் ஜோஷி தனது மருமகளை ஒரு கும்பல் துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகார் அளித்த நான்கு நாட்களுக்குப்பிறகு விக்ரம் ஜோஷி சுடப்பட்டார். பத்திரிக்கையாளர் சுடப்பட்ட இடத்தில் இருந்து சிசிடிவி கேமராவில் இந்த தாக்குதல் காட்சிகள் பதிவாகியுள்ளது.

மரணமடைந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷியின் குடும்பத்திற்கு ரூ .10 லட்சம் பத்திரிகையாளர் மனைவிக்கு  வேலை வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கழிவறையில் ரகசியமாக கேமிரா வைத்து வீடியோ எடுத்து சம்பளமின்றி வேலை செய்ய ஆசிரியைகளுக்கு மிரட்டல்
பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியை-ஆசிரியர்கள் கழிவறையில் ரகசியமாக கேமிரா வைத்து வீடியோ எடுத்து பல மாதங்களாக சம்பளமின்றி வேலை செய்யுமாறு ஆசிரியை ஆசிரியர்கள் மிரட்டப்பட்டு உள்ளனர்.
2. 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை 20 நாட்களில் 3 வது சம்பவம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. உத்தர பிரதேசத்தில் அதிகரித்து வரும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்
உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடரந்து அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
4. உத்தரபிரதேசத்தில் சிறுமி கற்பழித்துக்கொலை: எதிர்க்கட்சிகள் கண்டனம்
உத்தரபிரதேசத்தில் சிறுமி ஒருவர் கற்பழித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
5. குழந்தையை கடத்தி ரூ. 4 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை 12 மணி நேரத்தில் பிடித்து குழந்தையை மீட்ட போலீசார்
உத்தரப்பிரதேச 6 வயது குழந்தையை கடத்திச் சென்று 4 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய கும்பலை 12 மணி நேரத்தில் போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...