உலக செய்திகள்

பெற்றோரை கொலை செய்த பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற சிறுமிக்கு பாராட்டு + "||" + Afghanistan: Girl Shoots Dead Two Taliban Militants Who Killed Her Parents

பெற்றோரை கொலை செய்த பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற சிறுமிக்கு பாராட்டு

பெற்றோரை கொலை செய்த பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற சிறுமிக்கு பாராட்டு
ஆப்கானிஸ்தானில் இரண்டு தலிபான் பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
காபூல்

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் நிலவி வரும் சூழலில், அரசுக்கு ஆதரவாக செயல்படும் பொதுமக்களையும் தலிபன் பயங்கரவாதிகள் கொலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோர் மாகாணம் தியோரா மாவட்டத்தை சேர்ந்த கமர் குல் என்ற  அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால், கடந்த 16 ஆம் தேதி நள்ளிரவு அவர்களது வீட்டுக்கு வந்த தலிபன் பயங்கரவாதிகள் சிறுமியின் கண்முன்பே அவரது பெற்றோரை படுகொலை செய்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்த ஏகே-47 துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவரது தம்பியும் அந்த துப்பாக்கியை வாங்கி சுட்டதில் மேலும் சில பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். மீதமிருந்தவர்கள் தப்பியோடினர்.

சிறுமியின் தீர செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், சிறுமியும், அவரது தம்பியும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.. துப்பாக்கி ஏந்தியபடி அமர்ந்திருக்கும் அப்பெண்ணின் புகைப்படம் வைரலாக, தற்போது அவரும், அவரது தம்பியும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் அரசு- தலீபான்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது
ஆப்கானிஸ்தானின் நீண்டகால போரை முடிவுக்கு கொண்டுவரும் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி பேச்சுவார்த்தை கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நேற்று தொடங்கியது
2. ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கி சூட்டில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.
3. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு: துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் - காயங்களுடன் உயிர் தப்பினார்
ஆப்கானிஸ்தானில் துணை அதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அவர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
4. ஆப்கானிஸ்தான் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள் உள்பட 37 தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தான் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள் உள்பட 37 தலிபான்கள் பலியானார்கள்.
5. உலகிற்கே ஆபத்தான 400 பயங்கரவாதிகளை விடுதலை செய்யும் பணியை தொடங்கிய ஆப்கானிஸ்தான்
உலகிற்கே ஆபத்தானவர்கள் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட 400 தலிபான் பயங்கரவாதிகளையும் விடுதலை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...