மாநில செய்திகள்

தூத்துக்குடியில் நேர்மையான காவலர்களை பணியிட மாற்றம் செய்ய திட்டம் - உதவி ஆய்வாளரின் முகநூல் பதிவால் சர்ச்சை + "||" + Plan to reassign honest guards in Thoothukudi - Controversy over assistant inspector's Facebook post

தூத்துக்குடியில் நேர்மையான காவலர்களை பணியிட மாற்றம் செய்ய திட்டம் - உதவி ஆய்வாளரின் முகநூல் பதிவால் சர்ச்சை

தூத்துக்குடியில் நேர்மையான காவலர்களை பணியிட மாற்றம் செய்ய திட்டம் - உதவி ஆய்வாளரின் முகநூல் பதிவால் சர்ச்சை
தூத்துக்குடி மாவட்டத்தில் நேர்மையான காவலர்களை பணியிட மாற்றம் செய்ய திட்டமிடுவதாக உதவி ஆய்வாளர் ஒருவர் முகநூலில் பதிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம்  வடபாகம் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் சுந்தரம். இவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேர்மையாக பணியாற்றி வரும் காவலர்களை பணியிடை மாற்றம் செய்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.


இது தொடர்பாக 4 காவலர்களின் புகைப்படங்களையும் வெளியிட்ட அவர், நேர்மையாக பணியாற்றி வரும் இவர்களை பணியிட மாற்றம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இவரின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த தகவல் மாவட்ட எஸ்.பி.யின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உதவி ஆய்வாளரின் முகநூல் பக்கத்தில் இருந்த பதிவுகள் நீக்கப்பட்டது. மாவட்ட எஸ்.பி. கண்டித்ததன் பேரில் பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மிதவை கப்பல் மூலம் எரிபொருள் நிரப்பும் வசதி
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மிதவை கப்பல் மூலம் எரிபொருள் நிரப்பும் வசதி தொடங்கப்பட்டது.
2. தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் 21 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திறந்து வைத்தார்
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் 21 கண்காணிப்பு மேராக்களை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
3. தூத்துக்குடி - சென்னை சிறப்பு ரெயிலுக்கு முன்பதிவு தொடங்கியது
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.
4. தூத்துக்குடி பண்ணை பசுமை காய்கறி கடையில் இதுவரை ரூ.36 கோடிக்கு காய்கறிகள் விற்பனை - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
தூத்துக்குடி பண்ணை பசுமை காய்கறி கடையில் இதுவரை ரூ.36 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
5. தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3¼ கோடியில் மாணவர் விடுதி கட்டுமான பணிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி அருகே அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3¼ கோடியில் மாணவர் விடுதி கட்டுமான பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...