உலக செய்திகள்

முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால் வடகொரியாவில் நூதன தண்டனை...? + "||" + North Korea issues strict guidelines for people who don't wear masks

முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால் வடகொரியாவில் நூதன தண்டனை...?

முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால் வடகொரியாவில் நூதன தண்டனை...?
வடகொரியாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனையாக வட கொரியா மூன்று மாத கடின உழைப்பை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பியோங்யாங்

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு ஒன்று கூட இல்லை என்று கூறப்பட்டாலும், அங்கு முகக்கவசம் அணியாதவர்களுக்கு தண்டனை மற்றும் அபராதமாக மூன்று மாதங்களுக்கும் மேலான ஒழுக்க உழைப்புடன் தண்டிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் வடகொரியாவோ தங்கள் நாட்டில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று கூறி வருகிறது.ஆனால், வல்லுனர்கள் சீனாவிற்கு அருகில் இருக்கும் நாடு நிச்சயமாக வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இருக்கும். 

பொருளாதார தடையில் இருக்கும் வடகொரியாவிற்கு சீனா தான் ஆதரவு என்பதால், இந்த உண்மையை மறைத்து வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், தற்போது நாட்டில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனையாக வட கொரியா மூன்று மாத கடின உழைப்பை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது, கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின் கீழ் உள்ளதாகவும், மாணவர்கள் வெளியேறும்போது குடிமக்கள் முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா என்று சரிபார்க்க முகக்கவசம் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16-ஆம் தேதி பியோங்யாங்கிலும், மாகாண நகரங்களிலும் காவல்துறை அதிகாரிகளுடன், கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணியாத மக்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை நடத்த ஒரு ஆய்வுக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில், யார் முகக் கவசம் அணியவில்லை என்றாலும், மூன்று மாதங்களுக்கும் மேலான ஒழுக்க உழைப்புடன் தண்டிக்கப்படுவர் என்று வட கொரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.வடகொரியாவில், தொழிலாளர் முகாம் தண்டனைகள் பொதுவானவை என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. எந்த நிபந்தனையுமின்றி வடகொரியா அதிபரை சந்திக்க தயார்- ஜப்பான் புதிய பிரதமர்
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை எந்த நிபந்தனையுமின்றி சந்திக்க தயராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா தெரிவித்துள்ளார்.
2. என்ன ஆனார்... வடகொரியா அதிபர் சகோதரி... ஆபத்தில் இருக்கலாம்..?
கடந்த சில மாதங்களாகவே வடகொரியா அதிபர் சகோதரியைப் பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அவர் ஆபத்தில் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
3. வடகொரியாவில் அதிரடி நடவடிக்கை: தங்கைக்கு கூடுதல் அதிகாரம் தந்தார், கிம்
வடகொரியாவில் அதிரடி நடவடிக்கையாக தங்கைக்கு கூடுதல் அதிகாரம் தந்தார், கிம்
4. வடகொரிய மக்களிடமிருந்து செல்லப்பிராணிகளை பறித்து ஒட்டல்களில் உணவாக்க வழங்கும் அதிகாரிகள்
வடகொரிய மக்களிடமிருந்து செல்லப்பிராணிகளை பறித்து ஒட்டல்களில் உணவாக்க அந்த நாட்டு அதிகாரிகள் வழ்ங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
5. வடகொரியா தொடுத்த சைபர் தாக்குதல் முறியடிப்பு- இஸ்ரேல்
தங்களின் பாதுகாப்பு நிறுவனங்கள் மீது வடகொரியா தொடுத்த சைபர் தாக்குதலை துல்லியமாக முறியடித்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.