உலக செய்திகள்

10 முறை தற்கொலைக்கு முயன்ற 13 வயது சிறுமி ...11-வது முறை தாயாரே...! + "||" + 13 year old girl who tried to commit suicide 10 times ... 11th time mother ...!

10 முறை தற்கொலைக்கு முயன்ற 13 வயது சிறுமி ...11-வது முறை தாயாரே...!

10 முறை தற்கொலைக்கு முயன்ற 13 வயது சிறுமி ...11-வது முறை தாயாரே...!
ஆஸ்திரேலியாவில் இரண்டு மாதத்தில் 10 முறை தற்கொலைக்கு முயன்ற 13 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் அவர் தாயார் கனத்த மனதுடன் ஒரு முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது.
சிட்னி

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் மெரோன் சேவேஜ்  இவரது மகள்  கேடே  (13). இவர் சாலையில் சென்ற கார் முன்னால் போய் விழுந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் அவர் படு காயமடைந்தார்.

பின்னர் கேடே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.அவர் வென்டிலேட்டரில் வைக்கபட்டு உள்ளார். அவர் இறந்துவிடுவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் மனதை கல்லாக்கி கொண்டு அதை அணைக்க ஒத்து கொண்டார் மெரோன்

இதையடுத்து சிறுமி கேடே உயிர் பிரிந்தது. இது குறித்து மெரோன் கூறும் போது :-கடந்த 2 மாதத்தில் மட்டும் என் மகள் 10 முறை தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 11வது முறை முயற்சியில் உயிரிழந்துவிட்டாள், பெர்த்தின் மனநல அமைப்பு தான் என் மகள் வாழ்க்கையில் தோல்வியடைய காரணம் என்பேன்.

16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு பொது சுகாதார உள்நோயாளி பராமரிப்பு மனநல சிகிச்சை வசதி இல்லை .அவளுக்கு தற்கொலை எண்ணம் எப்போதும் வந்து கொண்டே இருந்தது, சம்பவத்தன்று செல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் இடத்துக்கு நானும் கேடேவும் சென்றோம், அவளுக்கு செல்லப்பிராணிகள் என்றால் அலாதி பிரியம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது.
2. சானிடசரை பந்தில் ஊற்றி தேய்த்ததாக புகார்: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் சஸ்பெண்ட்
சானிடசரை பந்தில் ஊற்றி தேய்த்ததாக எழுந்த புகாரையடுத்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
3. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க விரும்பம்
உலகின் மிக அதிக ஒற்றுமைகள் மிக்க இரட்டையர்களாக அறியப்படும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் தங்களது காதலர் மூலம் கர்ப்பம் தரிக்க விரும்பியுள்ளனர்.
4. இந்தியாவில் 2 மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளான ஆஸ்திரேலிய பெண் எழுதிய அனுபவ கதை
ஆஸ்திரேலியரான இளம்பெண் இமயமலை செல்லும் வழியில் கடத்தப்பட்டு, இரண்டு மாத காலம் சித்திரவதைக்கு உள்ளான சம்பவத்தை அவரே தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
5. ஆஸ்திரேலியாவில் 8500 ஆண்டுகளுக்கு முன் தண்ணீருக்கு அடியில் பழங்குடிகள் வாழ்ந்த இடம் கண்டுபிடிப்பு
ஆஸ்திரேலியாவில் 8500 ஆண்டுகளுக்கு முன் தண்ணீருக்கு அடியில் பழங்குடிகள் வாழ்ந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...