தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் இன்று மேலும் 1,640 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Telangana Has 1,640 New Positive COVID 19 Cases

தெலுங்கானாவில் இன்று மேலும் 1,640 பேருக்கு கொரோனா பாதிப்பு

தெலுங்கானாவில் இன்று மேலும் 1,640 பேருக்கு கொரோனா பாதிப்பு
தெலுங்கானாவில் இன்று மேலும் 1,640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. தெலுங்கானாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில நாட்களாக உச்சத்தை அடைந்து வருகிறது. பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தெலுங்கானாவில் இன்று புதிதாக 1,640 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 52,466 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 455 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரேநாளில் 1,007 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 40,334 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 11,677 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக ஐதராபாத்தில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலைக்கு சென்று விட்டது என்றும், மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று மேலும் 1,547 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் இன்று மேலும் 1,547 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாரதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.
2. கேரளாவில் மேலும் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் இன்று மேலும் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாரதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.
3. தெலுங்கானாவில் இன்று மேலும் 2,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தெலுங்கானாவில் இன்று அதிக அளவாக ஒரேநாளில் மேலும் 2,734 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தெலுங்கானாவில் இன்று மேலும் 2,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தெலுங்கானாவில் இன்று அதிக அளவாக ஒரேநாளில் மேலும் 2,795 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் இன்று மேலும் 1,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 1,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...