மாநில செய்திகள்

அ.தி.மு.க.வில் புதிய அமைப்பு செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு + "||" + Appointment of new organization secretaries in AIADMK: Edappadi Palanisamy, O. Panneerselvam announcement

அ.தி.மு.க.வில் புதிய அமைப்பு செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அ.தி.மு.க.வில் புதிய அமைப்பு செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமித்து உள்ளனர்.
சென்னை, 

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்களாக வி.கருப்பசாமி பாண்டியன்(முன்னாள் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்டம்), திருப்பூர் சி.சிவசாமி (முன்னாள் எம்.பி., திருப்பூர் மாநகர் மாவட்டம், முன்னாள் எம்.பி.), இசக்கி சுப்பையா(, முன்னாள் அமைச்சர், நெல்லை மாநகர் மாவட்டம்), எம்.புத்திச்சந்திரன்( முன்னாள் அமைச்சர், நீலகிரி மாவட்டம்), டி.ரத்தினவேல்(முன்னாள் எம்.பி., திருச்சி மாவட்டம்), வி.மருதராஜ்(திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர்), பி.ஜி.ராஜேந்திரன்( முன்னாள் எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்டம்), திருத்தணி கோ. அரி( திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்), வாலாஜாபாத் கணேசன்(காஞ்சீபுரம் மாவட்டம்), எஸ்.ஆசைமணி(மயிலாடுத்துறை மாவட்டம்), ஏ.கே.சீனிவாசன்( நெல்லை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

கொள்கை பரப்பு துணை செயலாளர்களாக தொல்லியல் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், பாப்புலர் வி.முத்தையா(நெல்லை மாநகர் மாவட்டம்), நடிகை விந்தியா ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளராக டாக்டர் வி.பி.பி. பரமசிவம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, இணை செயலாளர்களாக ஆ.இளவரசன், குமாரசாமி, தண்டரை கே.மனோகரன், துணைச்செயலாளராக கே.எஸ்.துரைமுருகன், ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளராக கே.சிங்காரம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளராக அ.மனோகரன் எம்.எல்.ஏ., மகளிர் அணி இணைச்செயலாளராக கணிதா சம்பத், வக்கீல் பிரிவு இணைச்செயலாளராக பாபு முருகவேல், விவசாய பிரிவு துணை செயலாளர்களாக முருகமலை சின்னசாமி, ஒ.வி.ஆர்.ராமசந்திரன், மருத்துவ அணி இணைச் செயலாளராக டாக்டர் வி.எஸ்.விஜய், தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளராக கே.ஆர்.பி.பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க., தி.மு.க.வை சேர்ந்த மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா - சென்னை மருத்துவமனையில் அனுமதி
சீர்காழி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாரதி, கீழ்வேளூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மதிவாணனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
2. அ.தி.மு.க., பா.ஜ.க. செய்து வரும் அரசியல் சூழ்ச்சிகளை தமிழக மக்கள் முறியடிக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு வேண்டுகோள்
அ.தி.மு.க., பா.ஜ.க. செய்து வரும் அரசியல் சூழ்ச்சிகளை தமிழக மக்கள் முறியடிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
3. அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? - கமல்ஹாசன் பேட்டி
அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? என்பதற்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.
4. முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் புதுவையின் பொருளாதாரத்தை அரசு சீரழித்து விட்டது அ.தி.மு.க. குற்றச்சாட்டு
முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் புதுவையின் பொருளாதாரத்தை அரசு சீரழித்து விட்டது என்று அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
5. சபாநாயகர் இருக்கை முன்பு அ.தி.மு.க., பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா
சட்டசபையில் கொரோனா குறித்து பேச அனுமதி கேட்டு சபாநாயகர் இருக்கை முன்பு அ.தி.மு.க., பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.