தேசிய செய்திகள்

21 வது ஆண்டு கார்கில் நினைவு தினம் - ராணுவ வீரர்களுக்கு ராகுல் காந்தி மரியாதை + "||" + 21st Memorial Day of Kargil - Rahul Gandhi pays tribute to soldiers

21 வது ஆண்டு கார்கில் நினைவு தினம் - ராணுவ வீரர்களுக்கு ராகுல் காந்தி மரியாதை

21 வது ஆண்டு கார்கில் நினைவு தினம் - ராணுவ வீரர்களுக்கு ராகுல் காந்தி மரியாதை
கார்கில் நினைவு தினம் 21 வது ஆண்டாக கடைபிடிக்கப்படும் நிலையில், இந்திய ராணுவ வீரர்களில் தியாகம் போற்றப்படக்கூடியது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

கடந்த 1999-இல் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியாவின் வெற்றிக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது.


அந்தவகையில் கார்கில் போர் வெற்றியின் 21-ஆவது ஆண்டு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவிடத்தில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். பாதுகாப்புத் துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் மற்றும் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர்.

பிரதமர் மோடி இன்று அகில இந்திய வானொலியில், ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பேசிய போது, கார்கில் போர் மூலம் ஒட்டுமொத்த உலகமே இந்திய வீரர்களின் திறமையையும் வீரத்தையும் பார்த்தது என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் கார்கில் நினைவு தினம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “இந்திய ராணுவ வீரர்களில் தியாகம் போற்றப்படக்கூடியது” என்று தெரிவித்துள்ளார். எந்த சூழலிலும் நமது நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு எப்போதும் தலைவணங்குவதாக தனது பதிவில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. எல்லையில் சீன ராணுவம் ஊடுருவவில்லையா? மத்திய மந்திரி கருத்துக்கு ராகுல் காந்தி கண்டனம்
இந்திய-சீன எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை என்று மத்திய மந்திரி கூறியதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
3. கொரோனா குறித்து எச்சரித்த போது ஊடகங்கள் என்னை கேலி செய்தன: ராகுல் காந்தி விமர்சனம்
கொரோனா குறித்து நான் முதலில் எச்சரித்த போது ஊடகங்கள் என்னை கேலி செய்தன என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
4. சீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி
இந்திய வீரர்கள் 20 பேரை படுகொலை செய்த சம்பவத்தில் சீனா தனது நிலைப்பாட்டை நியாப்படுத்த இந்திய அரசு அனுமதித்தது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
5. சீனா மோதல் விவகாரம்- சரண்டர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம்
லடாக் விவகாரத்தில் சீனாவிடம் பிரதமர் மோடி சரண்டர் ஆகிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...