மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று தளர்வில்லா ஊரடங்கு; வாகன சோதனைகள் தீவிரம் + "||" + Relentless curfew in Tamil Nadu today; Intensity of vehicle tests

தமிழகத்தில் இன்று தளர்வில்லா ஊரடங்கு; வாகன சோதனைகள் தீவிரம்

தமிழகத்தில் இன்று தளர்வில்லா ஊரடங்கு; வாகன சோதனைகள் தீவிரம்
தமிழகம் முழுவதும் இன்று தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
சென்னை,

தலைநகர் சென்னையில் ஆறாவது ஞாயிற்றுக் கிழமையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை , ஜிஎஸ்டி சாலை , மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்களை கண்காணிக்க, 288 இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. உத்தரவை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்வதோடு, அவர்களிடம் இருந்து போலீசார், அபராதம் வசூலிக்கின்றனர்.


மதுரையில், இன்று தளர்வில்லா ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதாக 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றிய 48ஆயிரம் நபர்களிடம் இருந்து 70 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளது. தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நெல்லை மாநகரில் 4-வது ஞாயிற்றுக்கிழமையாக தளர்வில்லா ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இல்லாததால், முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காட்சி அளித்தது. நெல்லையில் கொரோனா பாதித்த 3 ஆயிரத்து 595 பேரில் 2 ஆயிரத்து 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 458 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
2. தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் - இன்று வெளியிடு
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல், இன்று வெளியிடப்பட உள்ளது.
3. தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் இன்று 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...