தேசிய செய்திகள்

பா.ஜனதா எம்.பி அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தி + "||" + Before Vacating House, Priyanka Gandhi Invites New Occupant For Tea

பா.ஜனதா எம்.பி அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தி

பா.ஜனதா எம்.பி அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தி
பா.ஜனதா எம்.பி.யும் ஊடகப்பிரிவு தலைவருமான அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு பிரியங்கா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடெல்லி

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு, சிஆர்பிஎப் இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது.

இசட் பிளஸ் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்ட ஒருவருக்கு அரசின் சார்பில் வீடு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை.

ஆதலால், டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள எண் 35, 5பி இல்லத்தை பிரியங்கா காலி செய்ய வேண்டும். ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் வீட்டைக் காலி செய்து தர வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் அல்லது வாடகை வசூலிக்கப்படும்” எனத் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகாரத்துறை கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு இந்த வீடு கடந்த 1997-ம் ஆண்டு மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. ஏறக்குறைய 23 ஆண்டுகள் இந்த இல்லத்தில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 1-ம்தேதிக்குள் பிரியங்கா காந்தி தான் தங்கியிருக்கும் வீட்டை காலி செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். டெல்லியில் தங்கிக் கொள்ள குருகிராமில் செக்டர் 42 பகுதியில் தனியாக வீடு ஒன்றை தற்காலிகமாக பிரியங்கா காந்தி வாடகைக்கு எடுத்துள்ளார்.

பிரியங்கா காந்தி தங்கியிருந்த அரசு இல்லம், அவருக்குப்பின் பா.ஜனதா தேசிய ஊடகப்பிரிவு தலைவரும், எம்.பி.யுமான அனில் பலூனிக்கு மத்திய வீட்டுவசதித்துறை ஒதுக்கியது. 

இந்நிலையில் தான் தங்கியிருந்த வீட்டுக்கு புதிதாக குடியேற இருக்கும் பா.ஜனதா எம்.பி. அனில் பலூனிக்கு தேநீர் விருந்தளிக்க பிரியங்கா காந்தி கடிதம் மூலம் அழைப்பு விடுத்து உள்ளார். அவரின் அலுவலகத்துக்கும் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை அனில் பலூனியிடம் இருந்து எந்தத் தகவலும் பிரியங்கா காந்திக்கு இல்லை.

மத்திய அரசு குறிப்பிட்ட கால்கெடுவுக்குள் வீட்டைக் காலி செய்ய பிரியங்கா காந்தி தயாராக இருக்கிறார். அதற்கு முன்னதாக, அந்த வீட்டில் குடியேற இருக்கும் அனில் பலூனிக்கு வீடு சவுகரியமாக இருக்கிறதா, அல்லது ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவும், பரஸ்பர மரியாதை, நட்புக்காகவும் மட்டுமே தேநீர் விருந்தளிக்க பிரியங்கா காந்தி அழைத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மயில்களுடன் பிஸி நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் - ராகுல்காந்தி கிண்டல்
மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால், நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
2. பா.ஜனதாவில் சிவகார்த்திகேயன்?
பா.ஜனதாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைய உள்ளாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
3. வெறுக்கத்தக்க பேச்சு வெளியிட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ பேஸ்புக் பக்கத்திற்கு தடை
வெறுக்கத்தக்க பேச்சு வெளியிட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ பேஸ்புக் பக்கம் தடை செய்யப்பட்டு உள்ளது.
4. நாடாளுமன்ற விசாரணை வேண்டும்: பா.ஜனதா கட்டுப்பாட்டில் ‘வாட்ஸ் அப்’? - காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு
பா.ஜனதா கட்டுப்பாட்டில் வாட்ஸ் அப் விவகாரத்தில் நாடாளுமன்ற விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறித்தி உள்ளது.
5. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் எனத்தகவல்
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.