தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் மாநிலங்களில் கொரோனா தரவு அறிக்கையில் குளறுபடி -ஆய்வில் தகவல் + "||" + Uttar Pradesh, Bihar worst in COVID-19 reporting across India: Stanford study

இந்தியா முழுவதும் மாநிலங்களில் கொரோனா தரவு அறிக்கையில் குளறுபடி -ஆய்வில் தகவல்

இந்தியா முழுவதும் மாநிலங்களில் கொரோனா தரவு அறிக்கையில் குளறுபடி -ஆய்வில் தகவல்
இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் கொரோனா தரவு அறிக்கையை வெளியிடுவதில் ஏற்றதாழ்வுகள் இருப்பதாக அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளிபடுத்தி உள்ளனர்.
புதுடெல்லி: 

இந்தியாவில் நேற்றுவரை மொத்தம்  13 லட்சத்து 85 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. 

3 லட்சத்து 66 ஆயிரத்து 368 பேருக்கு பாதிப்பை கொண்டுள்ள மராட்டிய மாநிலம், தொடர்ந்து தொற்றில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்கிறது.

மூன்றாம் இடத்தில், 1 லட்சத்து 29 ஆயிரத்து 531 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ள டெல்லி நீடிக்கிறது.

4-ம் இடத்தில் கர்நாடகம் (90 ஆயிரத்து 942), 5-ம் இடத்தில் ஆந்திரா (88 ஆயிரத்து 671), 6-ம் இடத்தில் உத்தரபிரதேசம் (63 ஆயிரத்து 742), 7-ம் இடத்தில் மேற்கு வங்காளம் (56 ஆயிரத்து 377), 8-ம் இடத்தில் குஜராத் (54 ஆயிரத்து 626), 9-ம் இடத்தில் தெலுங்கானா (52 ஆயிரத்து 466), 10-ம் இடத்தில் ராஜஸ்தான் (35 ஆயிரத்து 298) உள்ளது.

பீகாரில் 36 ஆயிரத்து 604, அசாமில் 31 ஆயிரத்து 86, அரியானாவில் 30 ஆயிரத்து 538, மத்திய பிரதேசத்தில் 26 ஆயிரத்து 926, ஒடிசாவில் 24 ஆயிரத்து 13, கேரளாவில் 18 ஆயிரத்து 98, ஜம்மு காஷ்மீரில் 17 ஆயிரத்து 305, பஞ்சாப்பில் 12 ஆயிரத்து 684 பேருக்கு தொற்று உள்ளது.

ஜார்கண்டில் 7,836 பேருக்கும், சத்தீஷ்காரில் 7,087 பேருக்கும், உத்தரகாண்டில் 5,445 பேருக்கும், கோவாவில் 4,686 பேருக்கும், திரிபுராவில் 3,862 பேருக்கும், புதுச்சேரியில் 2,654 பேருக்கும், மணிப்பூரில் 2,176 பேருக்கும், இமாசலபிரதேசத்தில் 2,049 பேருக்கும், நாகலாந்தில் 1,289 பேருக்கும், லடாக்கில் 1,276 பேருக்கும், அருணாசலபிரதேசத்தில் 1,126 பேருக்கும், சண்டிகாரில் 852 பேருக்கும், தத்ராநகர் ஹவேலி, தாமன், தையுவில் 860 பேருக்கும் , மேகாலயாவில் 646 பேருக்கும், சிக்கிமில் 499 பேருக்கும், மிசோரமில் 361 பேருக்கும், அந்தமான் நிகோபாரில் 290 பேருக்கும் கொரோனா பாதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் தொற்று குறித்து அமெரிக்க ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி உள்ளனர்.

ப்ரீ பிரிண்ட் களஞ்சியமான ‘மெட்ராக்ஸிவ்’ இல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், இந்தியா முழுவதும் கொரோனா புள்ளிவிவர அறிக்கையில் ஏற்றத்தாழ்வு உள்ளது.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கொரோனா தொற்றின்  வெளிப்படையான மற்றும் அணுகக்கூடிய புள்ளிவிவர அறிக்கைகள் பொது சுகாதார முயற்சிகளுக்கு முக்கியமானது.

அதில் கர்நாடக மாநிலம் நல்ல கொரோனா தரவு அறிக்கையை கொண்டுள்ளது பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் மோசமான புள்ளிவிவரங்களை கொண்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த தரவு கட்டமைப்பானது பொது சுகாதார தரவு அறிக்கையின் நான்கு முக்கிய அம்சங்களைக் குறிக்கிறது. ஆராய்ச்சி குழு இந்த கட்டமைப்பைப் பயன்படுத்தி 29 மாநிலங்களுக்கு 'கொரோனா தரவு அறிக்கையிடல் மதிப்பெண் அளித்துள்ளது (சி.டி.ஆர்.எஸ்., 0 முதல் 1 வரை) இரண்டு வார காலப்பகுதியில் மே 19 முதல் ஜூன் 1 வரை. அவர்கள் செய்த கொரோனா தரவு அறிக்கையின் தரத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. 

இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:-

இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மேற்கொண்ட கொரோனா தரவு அறிக்கையின் தரம் குறித்த விரிவான மதிப்பீட்டை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

இந்த மதிப்பீடு இந்தியாவில் பொது சுகாதார நடவடிக்கை முயற்சிகளைத் தெரிவிக்கிறது மற்றும் பிற அரசாங்கங்களால் தொற்றுநோய் தரவு அறிக்கை தயாரிப்பு  வழிகாட்டியாக செயல்படுகிறது.

எங்கள் முடிவுகள் இந்தியாவில் மாநில அரசுகளால் செய்துள்ள கொரோனா  தரவு அறிக்கையின் தரத்தில் வலுவான ஏற்றத்தாழ்வு இருப்பதை காட்டுகின்றன.

ஆய்வுகள் கொரோனா தரவு அறிக்கையிடல் மதிப்பெண் கர்நாடகாவில் 0.61 (நன்று) முதல் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் 0.0 (மோசம்) வரை வேறுபடுகின்றன, இதன் சராசரி மதிப்பு 0.26 ஆகும்.

கூடுதலாக, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகியவை தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் வெளியிடுவதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் தனியுரிமையை சமரசம் செய்துள்ளன.

கொரோனா தரவுகளின் போக்கின் காட்சி பிரதிநிதித்துவத்தை பத்து மாநிலங்கள் மட்டுமே வழங்குகின்றன. பத்து மாநிலங்கள் வயது, பாலினம், நாள்பட்ட நோய் உள்ளவர்கள் அல்லது மாவட்டங்களால் வகைப்படுத்தப்பட்ட எந்த தரவையும் தெரிவிக்கவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. இரண்டு தடுப்பூசிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக பலன் தரும்- சவுமியா சுவாமிநாதன்
இரண்டு தடுப்பூசிகள் ஒரு வருடம் அல்லது அதற்கும் அதிகமாக எதிர்ப்பு சக்தி தரும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறி உள்ளார்.
2. கொரோனா தடுப்பூசியில் சாதனை! - 100 கோடி இலக்கை எட்டிய இந்தியா
தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்ட 85 நாட்களில் முதல் 10 கோடி (100 மில்லியன்) டோஸ் வழங்கப்பட்டதாக அரசாங்கம் கூறி உள்ளது.
3. ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி- தமிழக அரசு
அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
4. கோவிட் 19 பெருந்தொற்றினால் இரு மடங்காகும் மாரடைப்பு மரணங்கள்
கோவிட்19 பெருந்தொற்று நம் உடலில் அழற்சியை ஏற்படுத்தி பல உறுப்புகளை பாதிக்கிறது என்பது தெரிந்ததே. இதில் குறிப்பாக நுரையீரலை இந்நோய் பெரிய அளவில் பாதிக்கிறது என்றாலும் இதயமும் இதனால் பாதிக்கப்படுகிறது என்பது பலரும் அறியாத உண்மை.
5. தமிழகம்: தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு பரிசோதனைகளை அதிகரிக்க கலெக்டர்களுக்கு அறிவுரை
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,600 ஐ நெருங்கும் நிலையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.