தேசிய செய்திகள்

அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்கள்;பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் + "||" + PM Modi Launch "High-Throughput" Testing Facilities In 3 Cities Today

அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்கள்;பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்கள்;பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
மும்பை, கொல்கத்தா, நொய்டாவில்அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்கள்பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் ஐ.சி.எம்.ஆர். (இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்) மராட்டியத்தின் மும்பை, மேற்குவங்காளத்தின் கொல்கத்தா மற்றும் உத்தரபிரதேசத்தின் நொய்டா ஆகிய 3 இடங்களில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை அமைத்துள்ளது.

இந்த மையங்களை காணொலி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திரமோடி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், முதல்-மந்திரிகள் உத்தவ்தாக்கரே (மராட்டியம்), மம்தாபானர்ஜி (மேற்குவங்காளம்), யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்) ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த அதிவிரைவு பரிசோதனை மையங்களில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும் என்றும், எச்.ஐ.வி., டெங்கு உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்படும் என்றும் பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நீரிழிவு நோயாளிகள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
நீரிழிவு நோயாளிகள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. உடல் வலிமையாக இருக்கும் போதே மனமும் முழு வலிமையுடன் செயல்படும் - பிரதமர் மோடி
உடல் வலிமையாக இருக்கும் போதே மனமும் முழு வலிமையுடன் செயல்படும் என பிரதமர் மோடி கூறினார்.
3. தமிழகம் உள்பட 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
தமிழகம் உள்பட 7 மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
4. இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை
இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
5. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள், பிரதமர் மோடியுடன் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை திமுக எம்.பிக்கள் திடீரென சந்தித்துப்பேசினர்.