மாநில செய்திகள்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு + "||" + Zone wise in Chennai Release of corona treatment recipients profile

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 96,438 ஆக உள்ளது. சென்னையில் தற்போது 12,852 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,840 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

சென்னையில் மண்டலம் வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம் பின்வருமாறு:-

திருவொற்றியூர் - 442

மணலி - 158

மாதவரம் - 543

தண்டையார்பேட்டை - 634

ராயபுரம் - 808

திரு.வி.க நகர் - 1,129

அம்பத்தூர் - 1,159

அண்ணா நகர் - 1,456

தேனாம்பேட்டை - 1,014

கோடம்பாக்கம் - 1,840

வளசரவாக்கம் - 1,005

ஆலந்தூர் - 565

 அடையாறு - 1,203

பெருங்குடி - 464

சோழிங்கநல்லூர் - 430 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

15 மண்டலங்களில் 2 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா விழிப்புணர்வுக்காக 30 எல்.இ.டி. வீடியோ வாகன சேவை - எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
கொரோனா விழிப்புணர்வுக்காக 15 மண்டலங்களில் 30 அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகன சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
2. சென்னை, திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
4. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5. சென்னையில் பீதியை கிளப்பிய அமோனியம் நைட்ரேட்டை ஐதராபாத் கொண்டு செல்லும் பணி தொடங்கியது - 10 லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்டன
சென்னையில் பீதியை கிளப்பிய அமோனியம் நைட்ரேட்டை ஐதராபாத்துக்கு கொண்டு செல்லும் பணி நேற்று தொடங்கியது. முதற்கட்டமாக 10 லாரிகளில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.