மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது + "||" + Nanjjil Murugesan arrested in Uvari

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது
பாலியல் புகாருக்கு ஆளான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை,

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன். 2011 முதல் 2016 வரை எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவர் இதே தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்நிலையில் நாகர்கோவில் கோட்டாறை சேர்ந்த 15 வயதான 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நாஞ்சில் முருகேசன் மீது  அண்மையில்  நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அதிமுகவில் இருந்தும் நாஞ்சில் முருகேசன் நீக்கப்பட்டார்.

இந்த வழக்கில்  சிறுமியின் தாய் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நாஞ்சில் முருகேசன் மட்டும் போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவானார். இதையடுத்து, நாஞ்சில் முருகேசனை போலீசார்  தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.  இந்த நிலையில், நெல்லை மாவட்டம்  உவரி பகுதியில் தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசனை போலீசார் கைது செய்துள்ளனர்.